“எல்லோரையும் நம்பாதே!”: ரவி மோகன், ரவி மோகனுக்கு அட்வைஸ்!

“எல்லோரையும் நம்பாதே!”: ரவி மோகன், ரவி மோகனுக்கு அட்வைஸ்!

திரையுலகின் ஜென்டில்மேன் ஜெயம் ரவி – சாரி, நம்ம ‘ரவி மோகன்’ – சன் நெக்ஸ்ட் (SUN NXT) தளத்தின் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ ஷோவில் கலந்துகிட்டு அரங்கை அப்படியே அதிர வச்சிருக்காரு பாஸ்!

“எல்லோரையும் நம்பாதே” – இது இப்ப இருக்கிற ரவி, அவரோட சின்ன வயசு ரவிக்கு கொடுக்கிற செம ஷார்ப்பான அட்வைஸ். ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்துல பாக்ஸரா மிரட்டுனதுல இருந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்துல ராஜராஜ சோழனா கம்பீரம் காட்டுனது வரைக்கும் பல வேடங்கள்ல அசத்தின நம்ம ரவி மோகன், இப்போ தயாரிப்பாளராவும் புது அவதாரம் எடுத்திருக்காரு. ஆனா, மனசளவில இன்னமும் தான் ஒரு சினிமா மாணவன் தான் அப்படின்னு அடக்கமா சொல்றாரு. ஸ்கூல்ல பிரண்ட் பெஞ்ச் ஸ்டூடென்ட் இல்லைன்னாலும், சினிமா மேல இருந்த வெறித்தனமான காதலால, ஸ்பாட் பாயா தன் பயணத்தைத் தொடங்கி இன்னைக்கு இந்த உயரத்துக்கு வந்திருக்காரு. “என் தந்தை படங்களோட சுவையை வச்சே அதை அடையாளம் காண்பார்” அப்படின்னு தன் அப்பாவை பத்தி நெகிழ்ந்து போய் பேசியிருக்காரு.

நிகழ்ச்சியில சோஷியல் மீடியா கமெண்டுகளுக்கு அவர் கொடுத்த பதில்கள் எல்லாமே செம மாஸ். ஒரு நெகட்டிவ் கமெண்டுக்கு, “அவனை கொஞ்சம் இங்க வர சொல்லு” அப்படின்னு ஸ்போர்ட்டிவா கலாயிச்ச விதம் அம்புட்டு அழகு! அப்புறம் வந்துச்சு பாருங்க அந்த ‘காரசாரம் சேலஞ்ச்’ செக்மென்ட்… “எனக்கே கார சாப்பாடா?” அப்படின்னு அவர் குறும்பா கேட்டப்போ, அப்படியே ‘உனக்கும் எனக்கும்’ படத்தோட அந்த எனர்ஜடிக் ரவி ஞாபகத்துக்கு வந்துட்டாரு.

ஆனா, இந்த எபிஸோட்ல பல வெறித்தனமான கேள்விகளும் இருந்துச்சு. ‘தனி ஒருவன்’ பார்ட்-2 ஏன் இன்னும் எடுக்கல? நடிச்சதுக்காக வருத்தப்படுற ஒரே படம் எது? இனிமேல் கூடவே நடிக்கக் கூடாதுன்னு நினைக்கிற அந்த ஒரு நடிகர் யார்? – இப்படிப்பட்ட பல ‘சிக்கவைக்கும்’ கேள்விகளுக்கு ரவி மோகன் என்ன பதில் சொன்னாருன்னு தெரிஞ்சுக்க, நீங்க இந்த எபிஸோட கண்டிப்பா பார்த்தே ஆகணும்!

ஆனா, சில கேள்விகளுக்கு மனசுல இருந்து செம எமோஷனலா பதில் கொடுத்திருக்காரு. எந்த நடிகரோட நடிப்புத் திறன் உங்களுக்கு மகிழ்ச்சியையும், அதே சமயம் சின்னதா ஒரு பொறாமையையும் தரும்னு கேட்டப்போ, யோசிக்கவே இல்ல… “என் மகன் ஆரவ் ரவி தான்” அப்படின்னு சொல்லியிருக்காரு! அதேபோல, திரையுலகில் நீங்க முழுசா நம்புற நண்பர் யாருன்னு கேட்டப்போ, சற்றும் தயங்காம “கார்த்தி” அப்படின்னு சொல்லிட்டு, “என்னை பத்தி அவரும் இதையே தான் சொல்வார்” அப்படின்னு பிரண்ட்ஷிப் கோல்ஸ் காட்டியிருக்காரு!

கிளைமாக்ஸ்ல, தன்னோட செம ஹிட்டான ‘மக்கமிஷி’ பாட்டுக்கு ஒரு அக்மார்க் பரதநாட்டிய பெர்பாமென்ஸ் பண்ணி, அதை அப்படியே ஆங்கர் ஜெகனுக்கும் பொறுமையா கத்துக் கொடுத்து, எபிஸோட செம க்யூட்டா முடிச்சிருக்காரு. இது நம்ம ரவி மோகனால மட்டுமே சாத்தியம்!

நம்ம ரவி மோகன், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, ஹரிஷ் கல்யாண், ஐஸ்வர்யா ராஜேஷ், தேவி ஸ்ரீ பிரசாத் (DSP) என உங்களுக்கு பிடிச்ச பிரபலங்களோட லோலாயி லோக்கல் ரகளைகளை பார்க்க, ‘ஜாலி ஓ ஜிம்கானா’ ஷோவை சன் நெக்ஸ்ட் தளத்துல மிஸ் பண்ணாம பாருங்க. ஒவ்வொரு வியாழக்கிழமையும் புதுப்புது எபிஸோட்கள் ரிலீஸ் ஆகுது.

சன் நெக்ஸ்ட் (SUN NXT) பற்றி:
ஏழு மொழிகள், நாலாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 44-க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்கள் என தென்னிந்திய பொழுதுபோக்கின் ஒற்றை முகவரியாக மாஸ் காட்டி வருகிறது சன் நெக்ஸ்ட் தளம். மூவிகள், சீரியல்கள், லைவ் டிவி என எல்லாமே ஒரே இடத்தில்!

Related Posts