சங்கநாத இணைய வானொலியின் மூன்றாவது ஆண்டு விழா!

சங்கநாத இணைய வானொலியின் மூன்றாவது ஆண்டு விழா!

நேற்று நடைபெற்ற உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சார்பாக சங்கநாத இணைய வானொலியின் மூன்றாவது ஆண்டு துவக்க விழா சென்னையில் சர்பிடி தியாகராஜா அரங்கில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையைச் சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் முக்கிய சிறப்பு விருந்தினராக இலங்கை கல்வி ராஜாங்க அமைச்சர் மாண்புமிகு அருணாச்சல அரவிந்த குமார் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் மற்றும் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் எக்ஸ் எம் பி மற்றும் தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணையத்தின் துணைத் தலைவர்.இறையன்பன் குத்தூஸ்.மற்றும் தமிழ் மற்றும் பல மொழிகளில் பாடிய சினிமா பாடகி சுனந்தா ,இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் சகோதரி ஏ ஆர் ரைஹானா மற்றும்.உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்குழுத்தின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் அலெக்ஸ்ராஜ் மற்றும் மலேசியா சிங்கப்பூர் துபாய் குவைத் போன்ற எண்ணற்ற வெளிநாடுகளில் இருந்து கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.