“விஜய் ரசிகர்களை கட்டுப்படுத்துவது எப்படி?!”: பிரபல மனநல நிபுணர் ஆலோசனை!

“விஜய் ரசிகர்களை கட்டுப்படுத்துவது எப்படி?!”: பிரபல மனநல நிபுணர் ஆலோசனை!

விஜய் ரசிகர்கள் – த.வெ.க. தொண்டர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.

இது குறித்து பிரபல மனநல நிபுணரும் அஞ்சாமை திரைப்பட தயாரிப்பாளருமான எம்.திருநாவுக்கரசு, தனது MNANALAM CLINIC யு டியுப் சேனலில் ஆலோசனை அளித்து உள்ளார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி:

“விஜய் ரசிகர்களின் நடவடிக்கை எக்ஸ்ட்ரீமை தாண்டி போயிட்டிருக்கு.. அவங்களுக்கு உளவியல் மாற்றம் தேவை என எல்லோரும் சொல்கிறீர்கள்.. உங்கள் ஆலோசனை என்ன.. என்ன செஞ்சா அவங்களுக்கு மக்கள் மத்தியில நல்ல பெயர் கிடைக்கும்.. அந்த தொண்டர்கள் அல்லது ரசிகர்கள் என்ன செய்யணும்..”

மனநல நிபுணர் எம்.திருநாவுக்கரசு பதில்:

“அரசியல் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதான்.. மற்றபடி “நான் இதைச் செய்வேன், அதை ச் செய்வேன்” என்பது இல்லை.. ஏனென்றால் அதிகாரத்தைக் கைப்பற்றினால்தான் ஏதாவது செய்ய முடியும்.. இல்லாவிட்டால் பேசிக்கிட்டுத்தான் இருக்கணும்..

விஜய்க்கு கண்மூடித்தனமான பக்தி உள்ள கூட்டம்தான் இருக்கு.. கட்சிக்காரங்க என அடையாளரப் படுத்த முடியாது. அவரை பார்த்துட்டா போதும் அதுவே வாழ்க்கையில் சாபல்யம் என நினைக்கிறார்கள்.

விஜய் என்ன செய்ய வேண்டும் என்றால், அவர்தான் வழிப்படுத்த வேண்டும். வாரம் பத்து நிமிடமாவது ஆதரவாளர்களிடம் பேச வேண்டும்..

இந்து முஸ்லிம் கலவரம் அதை மாற்ற காந்தி ஒரே ஒரு வேண்டுகோள் விடுத்தார். நீங்க நிறுத்தலேன்னா சாப்பிட மாட்டேன்.. உண்ணாவிரதம் இருப்பேன் என்றார். அவருக்கு ஏதாவது ஆகிடும்னு பயந்துகிட்டு கலவரத்தை நிறுத்துவார்கள்..

அதனால்தான் அவர் அகிம்சாவாதி என போற்றப்படுகிறார்..

ஆகவே விஜய் நினைச்சா உடனே மாற்ற முடியும்!”

# குறிப்பு,: இந்த வீடியோ 12 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதாவது, காவலரின் கையை, த.வெ.க. தொண்டர் கடிக்கும் முன்பு.

அந்த வீடியோ..

 

 

 

Related Posts