நயன் – தனுஷ்.. யார் பக்கம் தவறு?

நயன் – தனுஷ்.. யார் பக்கம் தவறு?

நயன் – தனு2ஷ் விவகாரத்தில் யார் பக்கம் தவறு என விரிவாக, ஒன் இண்டியா யு டியுப் சேனலுக்கு  பேட்டி அளித்திருக்கிறார் பத்திரிகையாளர் டி.வி.சோமு.

அதில் இருந்து…


தமிழ் தெரியாமல், ஆகப்பெரும்பாலும் டப்பிங் வாய்ஸில் காலத்தை ஓட்டிய நயன்தாரா, தற்போது தமிழ்ப் புலமையுடன் தனுஷுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். கற்ற அவருக்கும், கற்பித்த விக்னேஷுக்கும் வாழ்த்துகள்.

நயனுக்கும் விக்னேசுக்கும் காதல் அரும்பியது, ‘நானும் ரவுடிதான்’ படத்தின் ஷூட்டிங்கின் போதுதான். காதல் மயக்கத்தில் விக்னேஷ் செலவை இழுத்து வைக்க.. தனுஷ் நொந்து போய், படத்தை கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டபோது, தனுஷுக்கு அழைப்பிதழ் இல்லை. தனக்கு வாழ்க்கை கொடுத்த அவருக்கு அழைப்பிதழ் அளிக்க வேண்டும் என விக்னேஷுக்குக்கூட தோன்றவில்லை.

தற்போது கூட, அந்தப் படத்தின் கிளிப்பிங்ஸை பயன்படுத்த நாகரீகமான முறையில் தனுஷை அணுகவில்லை.

இந்த ஓ.டி.டி. நிகழ்ச்சி, பொது மக்களின் நன்மைக்கானது அல்ல. பொது நோக்கம் இல்லை. வியாபாரம்.

கல்யாண செலவு முழுதையும் அந்த ஓ.டி.டி. செய்து, பெரும் தொகையும் கொடுத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி அந்த நிறுவனமும் சம்பாதிக்கப்போகிறது.

இது வியாபாரம். அவ்வளவே.

லெஜண்ட் சரவணா, தனது படத்தில் நடிக்க பெருந்தொகை (ரூ.15கோடி என தகவல்) தருவதாகச் சொல்லியும் நயன் மறுத்தார்.

தான் நடிக்கும் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்குக் கூட நயன் வரமாட்டார்.

இன்னொருவரின் படத் தலைப்பை, அதிரடியாக பறித்தது நயன் – விக்னேஷ் ஜோடி.

மூன்று வினாடிக்கு பத்து கோடி ரூபாயா என கேட்கும் நயன், ஏதாவது ஒரு விளம்பரத்துக்கு ஒரே ஒரு ஸ்டில் அனுமதி இன்றி தன்னை எடுத்துக்கொள்ள அணுமதிப்பாரா..

இவர் தயாரித்த படங்களில் இருந்து சில விநாடி காட்சிகளையாவது யாராவது அநுமதி இன்றி பயன்படுத்த அனுமதிப்பாரா..

அது போல் தனுஷுக்கும் உரிமை இருக்கிறது.

தவிர நயன் ஏதோ அப்பாவி என பலர் கருத்திடுகிறார்கள்.

2023 டிசம்பர் மாதம், சென்னையை மிக்ஜம் புயல் தாக்கியது. பலர் பாதிக்கப்பட்டனர்..வீடிழந்தனர். அவர்களுக்கு பலர் உதவினர். திரைத்துரையில் இருந்தும் இயக்குநர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் உதவினர்.

நயன்தாராவும் உதவிக்கு வந்தார். தனது நிறுவன நாப்கின்களை பெண்களுக்கு அளித்தார்.

மற்றவர்கள் விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. ஆனால் நயன்தார நிறுவனத்தார், நாப்கின் கொடுத்துவிட்டு பெண்களை படம் மற்றும் வீடியோ எடுத்தனர். பெண்கள் கூனிக்குறுகினர். இதை அப்போதே பலரும் கண்டித்தனர்.

இந்த நேரத்திலுமா வியாபார புத்தியைக் காண்பிப்பது என கண்டனம் தெரிவித்தனர்.

தனது ஒளிப்படங்கள், வீடியோவை இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவிட்டு தன்னை மக்களிடம் தேவதையாக வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார் நயன்தாரா. மக்கள் தன்னை கொண்டாடுவதை ரசிக்கிறார்.

ஆனால் தனது திருமணத்துக்கு ஒருவரையும் அண்டவிடாமல் அந்த நிகழ்ச்சையை ஒ.டி.டி.க்கு விற்பனை செய்தார். அதுகூட அவர் விருப்பம்.

வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்ற பிறகு.. அது விவகாரம் ஆன பிறகு, “ஐந்து வருடங்களுக்கு முன்பே பதிவுத்திருமணம்” செய்துகொண்டோம் என்றார். ஆக, பணத்துக்காக நாடக திருமணமா…

ஆக இவர்கள் எவரையும் மதிப்பதில்லை.

இந்த தம்பதி குடியிருந்த அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு அத்தனை தொல்லை கொடுத்தனர். பொறுக்க முடியாமல் பிறர் எதிர்த்த பிறகு, வேறு இடத்துக்கு குடி பெயர்ந்தனர்.

விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து. அவர் ( பலவருடங்களுக்கு முன்பே) தனது சகோதரர்களை ஏமாற்றி பரம்பரை நிலத்தை விற்றுவிட்டதாக புகார். புகார் தெரிவித்தவர்கள் அவரது உடன் பிறந்தவர்களே.

அவர்களில் ஒருவர்.. அதாவது விக்னேசின் சித்தப்பா.. தனக்கு ஆபரேசன் செய்ய வேண்டும்.. அதற்கு காசில்லை.. குழந்தைகளும் இல்லை… நிலத்தை மீட்டுத்தாருங்கள் என லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவருக்கு அன்பு செய்ய விக்னேஸ் சிவனுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ மனசு இல்லை.

இந்த நிலையில் தனுசை தரம் தாழ்ந்து வசைபாடி இருக்கிறார் நயன்தாரா.

– டி.வி.சோமு

# ‘இந்த மேட்டருக்கு இவ்ளோ டீட்டெய்லா’ என்பவர்களுக்கு ஒரு விளக்கம்: நயன் விசயமா இருந்தாலும், அமெரிக்க பொருளாதார விசயமா இருந்தாலும் டீட்டெய்லாதான் பேசுவோம்! 🙂

வீடியோ பேட்டி லிங்க்..

https://www.youtube.com/watch?v=MmaR94PtKFA

See less

Related Posts