வேட்டையன்: “நானே எதிர்பார்க்காத ஒன்று!” : ஞானவேல் ஓப்பன் டாக்!

ரஜினி நடிப்பில், த.செ. ஞானவேல் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘வேட்டையன்’. இப்படம் தற்போது ரசிகர்களின் வரவேற்புடன் வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் ‘வேட்டையன்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடந்துள்ளது.
கடந்த 10 ஆம் தேதி ரஜினி நடிப்பில் திரையரங்குகளில் வெளியானது ‘வேட்டையன்’. த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரிலீசான இப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ‘வேட்டையன்’ வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. இந்நிலையில் ‘வேட்டையன்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடந்துள்ளது.
ரஜினி நடிப்பில் கடைசியாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ வெளியானது. ரஜினியின் மாஸ் சீன்களுடன் ரிலீசான இப்படம் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்தது. இதனால் ரஜினி உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்தார். ‘ஜெயிலர்’ வெற்றியால் தனது அடுத்த படத்தையும் மெஹா ஹிட்டாக்கி விட வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தார்.
இதனையடுத்து தான் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‘வேட்டையன்’ படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. தனியார் டியூஷன் செண்டர்கள், போலி என்கவுண்டர், தோற்றத்தை வைத்து ஒருவரை குற்றவாளி என முடிவு செய்யக் கூடாது போன்ற சமூக பிரச்சனைகள் குறித்து பேசும் படைப்பாக ‘வேட்டையன்’ வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரஜினி படத்துக்கு எப்போதும் கிடைக்கும் வசூல் வேட்டையனுக்கும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் ‘வேட்டையன்’ வெளியாகி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், இன்று படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்துள்ளது. இவ்விழாவில் பேசியுள்ள இயக்குனர் த.செ. ஞானவேல், ‘ஜெயிலர்’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடிக்க துணிச்சல் வேண்டும். அந்த தைரியத்துடன் நடித்ததால் தான் அவர் சூப்பர் ஸ்டார்.
‘வேட்டையன்’ குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியானது மிகவும் மகிழ்ச்சி. ரசிகர்களை தாண்டி குழந்தைகளுடன் குடும்பத்தோடு தியேட்டர் வந்து படத்தை பார்க்குறாங்க. இது நானே எதிர்பார்க்காத ஒன்று. இவ்வாறு தெரிவித்துள்ளார் இயக்குனர் த.செ. ஞானவேல். அவரின் பேச்சு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.