பயணிகள் நிழற்கூடத்தை திறந்துவைத்த வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த்!

பயணிகள் நிழற்கூடத்தை திறந்துவைத்த வேலூர் எம்.பி.  கதிர் ஆனந்த்!

இன்று, வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேர்ணாம்பட் ஒன்றியத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இராஜக்கல் ஊராட்சியில் ரூபாய் 11.00இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் திறப்புவிழா மற்றும் எம்.வி.குப்பம் பயணிகள் நிழற்கூடம் ரூபாய் 11.00 இலட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா

ஒன்றிய கழக செயலாளர் ஜனார்த்தனன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பணியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமுலு அவர்கள் ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக, கிளை கழக செயலாளர்கள், ஊரக உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Related Posts