வசந்தகுமார் மரணம்: கொரோனாவால் பலியான முதல் எம்.பி.
கொரோனா தொற்று காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் இன்று மாலை காலமானார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர் வசந்தகுமார்.
பட்டப்படிப்பு முடித்து சென்னைக்கு வந்த வசந்தகுமார், 1970களில் விஜிபி நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்தார்.
1978ல் வசந்த அண்ட் கோ என்ற பெயரில் மின்சாதன பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையை சென்னையில் துவங்கினார்.
அந்நிறுவனம் வளர்ந்து இன்று தமிழகம் முழுதும் கிளை பரப்பி உள்ளது.
70 வயதான வசந்திகுமார், கொரோனா தொற்று காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு 10ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்தார்.
கொரோனா தொற்று காரணமாக, மரணமடைந்த முதல் எம்.பி. இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
.