1931 முதல் இன்று வரை உள்ள படங்கள்! பாரதிராஜா தொடங்கிய இணையதளத்தில்!

 சென்னை; இந்திய சினிமாவில் தமிழகத்தின் அடையாளமாக அறியப்படும் மூத்த இயக்குனரும், தயாரிப்பாளருமான ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா முயற்சியில் “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்” தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 3, 2020 அன்று வெளியிடப்பட்டது. இந்த அமைப்புக்கு www.TFAPA.com  எனும் பெயரில் இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு, அது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த தளத்தில் 1931 முதல் இன்று வரை வெளியான நேரடி தமிழ் திரைப்படங்களின் பெயர்கள், அதன் தயாரிப்பாளர்கள், நடித்த கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் படம் பற்றி இதர தகவல்களும் இடம் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தங்களின் திரைப்படத்திற்கு தலைப்புகளை பதிவு செய்ய தயாரிப்பாளர்கள், இந்த இணைய தளம் மூலம் நேரிடையாக பதிவு செய்யும் வசயும்  விரைவில் செய்யபடும் என தெரிவித்துள்ளனர். 

 கொரானாவால் தடைபட்டுபோன படப்பிடிப்புகளை மீண்டும் நடத்துவதற்கு தயாரிப்பாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் என பல உதவிகளை  “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்” மேற்கொள்ள இருக்கிறது.

திரையரங்குகளில் டிக்கட் விற்பனையில் வசூலிக்கப்படும் 8% உள்ளூர் வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் முறையிட்டு இருக்கிறோம். வெகு விரைவில் அது நீக்கப்பட்டு, ஒரு நல்ல தீர்வு தமிழக அரசிடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் உள்ளோம்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கிய பின் இதுவரை 100 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த  சங்கத்துக்கு  தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய  அலுவலகம் தயாராகி வருகிறது. இந்த அலுவலகம் திறமையான புதிய நிர்வாகிகள் தலைமையில் இயங்க உள்ளது. இதுவரை சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ள முதன்மை உறுப்பினர்கள் 50 பேர் சங்கத்துகான புதிய நிர்வாக குழுவை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இதற்கான இயக்குனர்-தயாரிப்பாளர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் T.G. தியாகராஜன்,  T. சிவா, G. தனஞ்ஜெயன், S.R. பிரபு, S.S. லலித் குமார், சுரேஷ் காமாட்சி மற்றும் 100 திரைப்பட தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படை தன்மையுடன் இருக்கும். உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவங்களை www.tfapa.com இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் தமிழ் சினிமாவின் நடப்புகளையும், சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றியும், இந்த இணைய தளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். சங்கத்தின் செயல்பாடுகளை இன்னும் கூடுதலாக்க, ஆக்கபூர்வமாக செயல்பட, உங்களின் ஆலோசனைகளை எங்களது அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளனர்.

யாழினி சோமு

Related Posts