வன வாணியின் 62வது ஆண்டு விழா: சிறப்பாக நடைபெற்றது

வன வாணியின் 62வது ஆண்டு விழா: சிறப்பாக நடைபெற்றது

சென்னை ஐ.ஐ.டி ,வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள வனவாணி மெட்ரிகுலேஷன் பள்ளி தனது 62 ஆவது ஆண்டு விழாவை வெகு சிறப்பாக  07/08/25 அன்று கொண்டாடியது. விழாவின் சிறப்பு விருந்தினராக  பேராசிரியர் திரு. மனு சந்தானம் அவர்களும் Dean – (IC&SR) (ஐ.ஐ.டி., மெட்ராஸ்) பள்ளியின் தலைவர் டாக்டர் பேராசிரியர். S.P.தனவேல் அவர்களும் பள்ளியின் செயலாளர் மற்றும் பொருளாளர் திரு. ரமன் குமார் அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.

இவர்களுடன்  பள்ளியின் முதல்வர் பொறுப்பாளர் திருமதி. ப்ரின்சி டாம் அவர்களும் துணை முதல்வர் பொறுப்பாளர்  திருமதி. அகிலாண்டேஸ்வரி அவர்களும் மாணவத் தலைவர் செல்வன். ஸ்ரீ ஹரி அவர்களும் மாணவத் தலைவி செல்வி.மௌமிதா அவர்களும் பங்கேற்றனர்.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக கடந்த ஆண்டு கல்வியில்  சாதனை புரிந்த மாணவ மணிகளுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களைச் சிறப்பு விருந்தினர்  வழங்கினார். மேலும் அவர்   உரையாற்றும் போது மாணவர்கள் அனைவரும் சிறந்த குடிமக்களாக மாற வேண்டும் ,கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்பது அவர்களின்  மனம்  மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு  வழி வகுக்கும் எனவும் , எதிர்கால சவால்களை மாணவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு ஊக்கமளித்து  அறிவுரை வழங்கினார்.

மேலும் பள்ளியின் முதல்வர் பொறுப்பாளர் அவர்கள் பள்ளியின் ஆண்டறிக்கையை வெளியிட்டார். விழாவில் பள்ளி மாணவர்களின்  கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  அந் நிகழ்ச்சியில் மழலையர்கள் முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினர். இறுதியாக நாட்டுப் பண்ணுடன் இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது.

 

-யாழினி சோமு

Related Posts