’வல்லமை’ படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளீர்கள்- இயக்குனர் உருக்கம்

’வல்லமை’ படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளீர்கள்- இயக்குனர் உருக்கம்

மதிப்புமிக்க பத்திரிகை, மீடியா நண்பர்களுக்கு வணக்கம்.

“வல்லமை” திரைப்படத்தை பார்த்துவிட்டு, படத்துக்கு மிகப்பெரும் அங்கீகாரம் கொடுத்து எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் உள்ளீர்கள்!

தரமான படைப்புகளை நீங்கள் எப்போதும் கைவிடுவதில்லை.
படத்தைப்பற்றிய உங்கள் மதிப்புமிக்க எண்ணங்களை, உங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் பெருமளவில் பகிர்ந்து, மக்களிடம் “வல்லமை” திரைப்படத்தை கொண்டுபோய் சேர்த்து வலிமைபெற செய்யுங்கள் என்று அன்பு நிறைந்து கேட்டுக்கொள்கிறேன்!

உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும், எழுத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பும், நன்றியும்!

கருப்பையா முருகன்
“வல்லமை” இயக்குநர்
பேட்லர்ஸ் சினிமா

Related Posts