ட்ராப் நகரம்”ஜீவியை தேர்ந்தெடுத்தது ஏன்? டெல்.கணேசன் .

ட்ராப் நகரம்’’ இந்தப்படம் எடுப்பதற்கான ஐடியா 2019-ல் வந்தது. ஒரு சவுண்ட் ட்ராக்  வேலைக்காகத் தான் ஜிவியைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்த போதே அவரிடம் ஒரு திறமை இருப்பதாக தெரிந்தது..அவரின் வொர்க் எனக்குப் பிடிக்கும்..இனி இசைக்காக ஹாலிவுட்ல இருந்து வருவார்கள்.

மேலும் இந்தப் படத்தில் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் நடித்துள்ளனர். எத்தனை தியேட்டரில் ரிலீஸ் பண்ணணும் என்று  இதுவரை எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

தமிழை விட ஆங்கிலம் மார்க்கெட் 200% அதிகம். அதனால் ஜிவி இண்டெர்நேஷனல் லெவலில் இனி அறியப்படுவார். ஜிவியை அமெரிக்காவில் உள்ள  லோக்கல் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். படம் அங்கும் இங்கும் ஒரே நேரத்தில் ரிலிஸ் ஆகாது. ஏன் என்றால் அங்கு இருக்கும் சென்சார் தனி. இங்கும் இருக்கக் கூடிய சென்சார் தனி.
சாத்தானின் இரவு (டெவில்ஸ் நைட்)  கிறிஸ்துமஸ் கூப்பன், ட்ராப் சிட்டி, படங்களின் தயாரிப்பைத்  தொடர்ந்து மேலும் இரண்டு படங்களை டிஸ்டிபூட் பண்ண இருக்கிறேன். தமிழில் இப்பைதைக்கு படம் பண்ணும் என்னம் இல்லை.

யாருமே பண்ணாத விசயங்களைத் நான் தான் செய்யணும் என்று நினைக்கிறேன். இந்த ட்ராப் சிட்டி படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். முதலில் ஆங்கிலத்தில்  அதன்பின் டப் செய்து தமிழில் வெளியீடும் என்னம் இருக்கிறது” என்றார்

Related Posts