யு டியுப் மூலம் ஹீரோயின் ஆன ஆர்ஷா!

யு  டியுப் மூலம் ஹீரோயின் ஆன ஆர்ஷா!

லைட் ஹவுஸ் மீடியா, ஸ்ரீ தர்மா புரடக்சன், ஜஸ்பர் ஸ்டுடியோஸ்  & வித்ரா ஆகியவை இணைந்து தயாரிக்கும் திரைப்படம் முகை.

அறிமுக இயக்குநர் அஜித்குமார் ஜே உருவாக்கத்தில்,  கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ  உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக் குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்வில்,  தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் எஸ் வி சேகர், இயக்குநர் பிரவீன் காந்த், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் தயாரிப்பாளருமான முரளி ராமசாமி  உள்ளிட்டோர் படக்குழுவினரை வாழ்த்தி பேசினர்.நடிகர் ஜெயப்பிரகாஷ்,  நடிகை ஆர்ஷா சாந்தினி பைஜூ ,இசையமைப்பாளர் சக்தி , ஒளிப்பதிவாளர் அர்ஜுன், படத்தின் தயாரிப்பாளர் ராஜா,இணை தயாரிப்பாளர் கிஷோர்  உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் டில்லிபாபு பேசும்போது, “ரிஷி என்னுடைய நண்பர். அவருடைய நண்பர் தயாரிப்பாளர் சந்தோஷ். தமிழ் சினிமாவுக்கு கனவுகளோடு இவர்கள் வந்துள்ளார்கள். திறமையான இயக்குநர் அஜித்குமார். சினிமாவின் எதிர்காலம் இளைஞர்களிடம் தான் இருக்கிறது. நிறைய புதுமுக தயாரிப்பாளர்கள் தமிழுக்கு வருவது மகிழ்ச்சி. படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று வாழ்த்தினார்.

இயக்குநர் அஜித்குமார், “நாயகி நடித்த ஒரு யூடியூப் விடியோ பார்த்து அவரை தேர்வு செய்தேன். மிக நன்றாக நடித்துள்ளார். ஒரே இடத்தில் நடக்கும் கதை. கிஷோர் குமார் சார் இப்படத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். என்னை நம்பி உழைத்த என் படக்குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் சந்தோஷ், “லாக்டவுனில் தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அஜித்குமார் அப்போது தான் பழக்கமானார். சும்மா இருக்கிறோம் ஏதாவது கதை பண்ணு என்றேன். அவர் உருவாக்கிய கதை தான் இது.

இந்தப்படத்திற்கு கிஷோர் குமார் பொருத்தமாக இருப்பார் என அவரை சந்தித்தோம். அவர் எங்கள் படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார். கிஷோர் குமார் சார் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை. நாயகி எங்களை நம்பி வந்து நடித்து தந்தார். படம் நன்றாக வரவேண்டுமென தொழில்நுட்ப கலைஞர்கள் மிகவும் உழைத்துள்ளனர். இப்படத்திற்காக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.

 
 

Related Posts