மூணாறு நிலச்சரிவு 83 தமிழர்கள் வேதனை..! அரசியல் தலைவர்கள் ட்விட்டர் பதிவு
சென்னை: மூணாறு ராஜமாலா தேயிலை தோட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்திருக்கிறது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த குடுப்பத்தினருக்கு துணைமுதல்வர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க.தலைவர் ஸ்டலின் ஆகியோர் தனது விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தொட்ட தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அவர்களுக்கு தகுந்த பாதுகாக்க வழங்க வேண்டும் என்று கேரளா முதல்வருக்கு கோரிக்கையும் வைத்துள்ளனர். மண்சரிவில் சிக்கி காயமடைந்த அனைவரும் சீகிரம் குணமடைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க ஸ்டாலின். தனது ட்விட்டர் பதிவில் மூணாறு ராஜமாலா தேயிலைத் தோட்ட நிலச்சரிவில் 80க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்! நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ வசதிகளைச் செய்து, இழப்பீடு வழங்கி அவர்களை கேரளா முதல்வர் பாதுகாக்க வேண்டும் தமிழக அரசும் உதவ வேண்டும் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
யாழினி சோமு