ரூ.25 லட்சம் நிதி: பயந்ததா சூர்யா – ஜோதிகா குடும்பம்?
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா, ரூ.25 லட்சம் மதிப்புகள்ள உதவிகளை செய்திருக்கிறார். இந்நிலையில், சிலர், “பயந்துகொண்டு ஜோதிகா உதவி செய்திருக்கிறார்” என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகறார்கள்.
படப்பிடிப்புக்காக தஞ்சை சென்ற நடிகை ஜோதிகா, அங்குள்ள ராஜா மிராசுதார் மருத்துவமனையில் பல வசதிகள் இல்லாததைக் கண்டார். இது குறித்து ஒரு நிகழ்ச்சியில், “தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்றேன். சிறப்பாக பராமரிக்கிறார்கள். அதே போல கோயில்களுக்கும் நிதி உதவி செய்து, சிறப்பாக பராமரிக்க வேண்டும்!” என்றார்.
உடனே சிலர், “கோயில்களுக்கு எதிராக பேசிவிட்டார் ஜோதிகா… வேறு மத வழிபாட்டுதலங்களைப் பற்றி அவர் பேசுவாரா?” என்று பொங்கினார்கள்.
“கோயில்களை பராமரிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அதைப்போலவே மருத்துவமனைகளையும் பராமரியுங்கள் என்றுதான் ஜோதிகா கூறினார். தவிர, அங்கு கோயில் இருந்ததால் அப்படி கூறினார்.. மற்றபடி வழிபாட்டுத்தலங்கள் அனைத்துக்குமே அவரது கருத்து பொருந்தும்!” என்று பலரும் தெரிவித்தபோதும், அவர்கள், ஜோதிகாவை இழிவாக பேசுவதை தொடர்ந்தனர்.
தற்போது ஜோதிகா, தான் குறிப்பிட்ட அந்த, ராஜா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான உதவிகளை செய்துள்ளார்.
இதை்தாதன், “எங்கள் எதிர்ப்புக்கு பயந்து ஜோதிகா உதவி செய்திருக்கிறார்!” என்று புதிய சர்ச்சையை சிலர் கிளப்புகிறார்கள்.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “கடந்த ஏப்ரல் மாதம், சிலர் இந்தய சர்ச்சையை உருவாக்கினர். ‘ஜோதிகா மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் அவரதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்; அவரது வீட்டு முன் மறியல் செய்வோம்!” என்று பேசினர்.
ஆனால்ஜோதிகா வருத்தம் தெரிவிக்கவே இல்லை; தவிர அவருக்கு ஆதரவாக அவரது கணவரும் நடிகருமான சூர்யா குரல் கொடுத்தார்; மேலும், மன்னிப்பு கேட்க முடியாது என வெளிப்டையாக தெரிவித்தார்.
ஆகவே, அந்த மருத்துவனையை சீர்படுத்த வேண்டும் என்ற பொதுநோக்கத்துடனே அவர் உதவி செய்திருக்கிறார்!” என்கின்றனர்.
ஜோதிகா அளித்த உதவிக்காக, அவருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
இனியன்