உடல் பயிற்சியினால் இத்தனை நன்மையா?
ஆரோக்கியமான உடல், அழகாகவும்,நம்மை சுறுசுறுப்பாக இயங்கவைப்பதற்கு உதவிகிறது உடல் பயிற்சி. அதற்கு நாம் ஜிம்முக்கு தான் போக வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பணத்தைக் கட்டி சென்றாலும் தொடர்ச்சியாக நம்மால் போக முடியாமல் போனால் அதை அப்படியே விட்டு விடாமல் வீட்டில் தொடரலாம். உடல் பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும் என்ற என்னம் முதலில் உங்கள் மனதில் வரவேண்டும். அப்படி தோன்றினாலே உங்களால் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். வீட்டின் மொட்டை மாடியில் நடை பயிற்சி, எடை தூக்குதல், புஷ்-அப் என்று நீங்கள் கற்றுக் கொண்ட உடல் பயிற்சிக்கு சிறிய இடம் இருந்தாலே போது மானது. இதனால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றிதான் நாம் பார்க்கப்போகிறோம்.
நன்மைகள்;
உடற்பயிற்சிகளின் போது, நமது மூளை உற்பத்தி செய்யும் நரம்புகளை தூண்டும். அவ்வாறு தூண்டும் போது சில ரசாயனங்கள், வலி மற்றும் மனச்சோர்வு உணர்வை தற்காலிகமாக நிறுத்துவதாக பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு கூறுகிறது. மேலும் இது செரடோனின், டோபாமைன், நார் எபினெப்ரின் போன்ற மன அழுத்தத்தை குறைத்து நமது மனம் மற்றும் மூளையை அமைதிபடுத்துவதாகவும் கூறுகிறது. மகிழ்ச்சி உணர்வை தூண்டி உடலில் ஹார்மோன்கள் சுரப்பையும் உடற்பயிற்சி ஊக்கப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

எடை குறைப்பு;
இந்த கால வாழ்க்கை சூழ்நிலை உடலுழைப்பு குறைவாக இருப்பதால் உடற்பருமன் அதிகரிக்கிறது. அதை தடுப்பதற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் உடற்பயிற்சிகள் செய்வதால் உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கிறது. இதனால் நாம் எடுத்துக் கொள்ளும் அதிகப்படியான கலோரி எரிக்கப்பட்டு, கொழுப்பு குறைக்கப்படுவதால் இது இயற்கையாகவே உடல் எடை குறைகிறது.
எலும்புகள் வலுக்கும்;
நமது தசைகள் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க செய்கிறது. மற்றும் எலும்புகளை வலுவாக்கி பராமரிப்பதில் முக்கிய பங்கு உடல் பயிற்சிக்கு உண்டு. அதனால் தான் அந்த காலத்தில் உடல் பயிற்சிக்கு முக்கியதுவம் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள். நாட்டை காக்கும் போர் வீரர்களும், விளையாட்டு வீரர்களும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். மனதளவிலும், உடல் அளவிலும் அவர்களை தயார் செய்ய உடல் பயிற்சி உதவுகிறது.
பயிற்சியாளர்கள் உணவில் போதுமான அளவு புரதச் சத்து உட்கொண்டு, எடை தூக்குதல் போன்ற பயிற்சிகள் மேற்கொண்டால், தசை வளச்சி மற்றும் வலுவும் அதிகரிக்கும்.உடல்பயிற்சியின் போது சுரக்கப்படும் சில ஹார்மோன்கள், உடல் தசைகள் அமினோ அமிலங்கள் சுரப்பதை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பி தசைகளின் வளர்ச்சிக்கு உதவிசெய்து அவை சேதமடைவதை தாடுக்கிறது. எலும்புகள் வலுவிழக்கும் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
உடலின் சத்தி அதிகரிக்கும் :
உடற்பயிற்சியின் போது உடம்பில் இருக்கும் ஒட்டுமொத்த செல்களும் சுறுசுறுப்பாகின்றன. மேலும் இவை உடலில் கழிவுநீக்கச் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. இதன் காரணமாக உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படுகின்றன. உடல் சார்ந்த பிரச்சனைக்கு மருந்து மட்டும் தீர்வாகாது. உடல்பயிற்சியும் அவசியம் தேவை என்கின்றனர் மருத்துவர்கள்.
உடலுழைப்பு குறைவதே பல நோய்களுக்கு அடிப்படையான காரணமாக அமைகிறது. போதுமான உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாததே புற்றுநோய், மூட்டுவலி, மனச்சோர்வு, தூக்கமின்மை, பதற்றம் போன்ற நாட்பட்ட நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த நோய் பாதிப்பு குறைப்பதற்கு உடற்பயிற்சி உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சருமத்தை பாதுகாக்கும்;
உடற்பயிற்சி செய்யும் போது ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் சருமத்துக்கு அதிக அளவு ஆக்சிஜனும், ஊட்டச்சத்துகளும் கிடைக்கப் பெறுகிறது. மேலும் சருமத்தை புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்து தோல் சுறுக்கங்களை தவிர்க்கிறது.
செக்ஸ் வாழ்க்கை;
உடற்பயிற்சி செய்வதை தினமும் வழக்கமாக்கிக் கொண்டால் ஆண்கள், பெண்கள் இருபாலரிடமும் உடலுறவு செயல்பாட்டை மேம்படுத்துவதுடன் ஆர்வத்தையும் அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. தாம்பத்ய உறவில் நாட்டத்தை ஏற்படுத்துவதால் தம்பதியர் இளமையாக உணர்வதாக கூறுகின்றனர். மேலும் மன அழுத்தத்தை குறைத்து சுறுசுறுப்பாக இயங்க நீங்கள் விரும்பும் வகையில் உடல் ஒத்துழைப்பதுடன் உறவின் போது கலோரிகள் எரிக்கப்படுவதால் இதுவும் ஒரு வகையான இருவரும் சேர்ந்து செய்யக்கூடிய உடல் பயிற்சி போன்றதே என்கின்றனர் ஆராச்சியாளர்கள்.
மூளையின் செயல்திறன்;
உடற்பயிற்சியின் போது ரத்தம் ஓட்டம் அதிகரித்து இதனால் அதிகமான ஆக்சிஜன் மூளைக்கு கிடைக்கிறது. இதன் காரணமாக ஹார்மோன் சுரப்புகள் மூளைச் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. மேலும் வயதான காலத்தில் நினைவுத்திறனை தக்கவைக்கவும், மனச்சோர்வு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது. தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி உள்ளிட்டவை குறைவதாகவும் கூறுகின்றனர்.
பயிற்சியின் போது அதிகப்படியான ஆற்றலை செலவிடுவதால் உடல் கலைத்துப் போகிறது. இதனால் தூக்கம் தூண்டப்படுகிறது. தேவையான ஓய்வு கிடைக்கும் போது உடல் தனது சுத்திகரிப்பு வேலையை சரிவரசெய்ய முடிகிறது. இதனால் காலையில் எழும்போது உற்சாகத்துடன் இருப்பதால் மனம்சார்ந்த, உடல் சார்ந்த பிரசனைக்கு தீர்வாக அமையும் என்கின்றனர்.
-யாழினி சோமு

