பார்த்தவர்களை வியக்க வைத்த ‘ தேன்’!

விரைவில் வெளியாக உள்ளது, கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள, ‘தேன்’ திரைப்படம்.

இயற்கையே அரணாகத் திகழும் மலைக் கிராமத்தினுள்  கார்ப்பரேட் நிறுவனம் நுழைந்தால், எந்த மாதிரியான ஆபத்துகள் நடக்கும் என்பதே ‘தேன்’ படத்தின் கதை.

‘டோரா’, ‘காளை’ ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தருண் குமார் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான ஆர்யாவின் ‘உங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அபர்நிதி ஜோடியாகிறார்.

இவர்களுடன் அனுஸ்ரீ, பாவா லட்சுமணன், கயல் தேவராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – கணேஷ் விநாயகன்

ஒளிப்பதிவு – சுகுமார்

இசை – சனத் பரத்வாஜ்

 படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்

சண்டை இயக்கம் – ஆக்சன் நூர்

 வசனம் – ராசி தங்கத்துரை

பாடல்கள் – ஞானக்கரவேல், ஸ்டாலின்

கலை இயக்கம் – மாயபாண்டி

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

படத்தைப் பற்றி இயக்குநர் கணேஷ் விநாயகன் கூறும்போதும் “இத்திரைப்படம் மலை வாழ் மக்களின் வாழ்வியலை யதார்த்தத்தைப் பேசும்படம்.  படத்தில் யதார்த்தம் மீறிய செயலை காட்சிப்படுத்தவில்லை  இந்த திரைபப்டம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது!” என்கிறார்.

போடி மலைப் பகுதியில் குரங்கனி அருகே இருக்கும் குறிஞ்சி என்னும் மலைவாழ் கிராமம்தான் இந்தப் படத்தின் கதைக் களம்.  

மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் குண நலன்கள், பழக்க வழக்கம்.. தற்போதைய அரசுகளின் சட்டத் திட்டங்களால் எப்படி இந்த ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக எடுத்துறைக்கிறது திரைப்படம்.

படம் முழுவதையும் குரங்கனி மலைப் பகுதியிலும், தேனி பகுதியிலும் அற்புதமான சூழலில் படமாக்கியுள்ளனர்.

பல்வேறு வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றுள்ள இப்படம், வரும் ஜனவரியில்  வெளியாக இருக்கிறது.  .

இந்தப் படத்தை பல வெற்றிப் படங்களை வெளியிட்டிருக்கும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தரான ஆர்.ரவீந்திரன் வெளியிடுகிறார்.

 

Related Posts