கொரோனாவில் இருந்து காக்கும் ஆவி?

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள, பலரும் இப்போது சொல்வது ஆவி பிடிக்கும் முறையைத்தான்.

இது நம்மிடையே காலம் காலமாக இருப்பதுதான்.

இருமல், , சளித் தொந்தரவு, தலைவலி மற்றும் உடல் அசதி இருந்தால் ஆவி பிடிப்பது நமது வழக்கம்.

நீர் உள்ள பாத்திரத்தில், குப்பைமேனி, துளசி, புதினா, கற்பூரவல்லி, வேப்பிலை, மஞ்சள் தூள் ஆகிவயற்றைப் போட வேண்டும். பிறகு அந்தபாத்திரத்தை சூடுபடுத்தி கொதிக்க விடவேண்டும்.  நல்ல கொதிவந்ததும் இறக்கி பாத்திரத்தின் முன் முகத்தை காண்பித்தபடி அமரவேண்டும். பாததிரத்துடன் சேர்த்து உடலை போர்வையால் மூட வேண்டும்.

ஐந்து நிமிடம் ஆவி பிடித்தால் போதும். சளி, இருமல் எல்லாம் காணாமல் போய்விடும்.

இந்த முறையைத்தான் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சொல்கிறார்கள்.