இந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி மாயத்திரை படகுழுவினர்!
அறிமுக இயக்குனர் சம்பத் குமார் இயக்கும் மாயத்திரை படபிடிப்பு நடந்து வருகிறது. இதில் படத்தின் கதாநாயகனாக அசோக் குமார் ஜோடியாக டூலெட், திரௌபதி படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் மற்றும் பாண்டி முனி படத்தில் நடித்து வரும் மேகாலி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மாயத்திரை படக்குழுவினர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு வந்தபோது நேற்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி செலுத்திய பின்பாகவே படபிடிப்பு தொடங்கியது.