தங்கத்தின் விலை! சரிவு ஏன்?
இந்தியாவில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயிக்கப் படுகிறது.
உலக நாடுகளை அச்சுருத்தும் கொரோனா வைரஸ் பரவலால் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி சர்வதேச சந்தையிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் தங்கத்தின் விலையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
சமீபகாலமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்ததால் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து பவுன் ரூ.34 ஆயிரத்தை தொட்டது.
ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டுவருவதால் உலகம் முழுவதும் பல நாடுகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதன் காரணமாக வர்த்தகமும் மெல்ல மெல்ல முடங்கப்பட்டதால் தங்கம் விலையில் சரிந்து வருகிறது.
சென்னை நிலவரப்படி கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை மெல்ல மெல்ல குறைந்து நேற்று ஒரு கிராம் ரூ.3,943-க்கும், பவுன் ரூ.31,544-க்கும் விற்பனை ஆனது.
இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.73 குறைந்து ரூ.3,870-க்கும், பவுனுக்கு ரூ.584 குறைந்து ரூ.30,960-க்கும் விற்பனை ஆகிறது.
இந்த பாதிப்பு வெள்ளியையும் விட்டு வைக்கவில்லை. கிராமுக்கு ரூ.1.80 காசுகள் குறைந்து ரூ.39-க்கும், கிலோ ரூ.39 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது.
இந்த 10 நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.2,696 குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகளில் போக்குவரத்து முடங்கி இருப்பதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை மேலும் குறையும் என கூறினர்.