ஷீரடிக்கு யாரும் வர வேண்டாம்!

ஷீரடி சாய்பாபா கோவில் மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது கொடூர முகத்தைக் காட்டி அச்சுறுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பினைத் தொடர்ந்து, ஷீரடி கோவிலுக்கு பக்தர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கோவில் நிர்வாகம் வேண்டுகோள் வைத்துள்ளது.

கொரோனா பாதிப்பு  அதிகரித்து  வருவதால் கோவிலுக்கு  யாரும் வந்து கஷ்டப்பட தேவையில்லை. மத்திய அரசின் பரிந்துரையை  பக்தர்கள்  ஏற்று அதன் படி நடக்க வேண்டும் யாரும் இப்போதைக்கு ஷீரடிக்கு வர வேண்டாம் என கூறியுள்ளது.