“எதிர்ப்புகளை மீறி “காட்மேன்” வெளியாகும்!” : படைப்புக்குழு அறிவிப்பு

 
பிராமணர்களை இழிவுபடுத்தியதாக “காட்மேன்” வெப் தொடருக்கு ஏற்பட்ட எதிர்ப்பு, கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், இதையும் மீறி அத்தொடர் வெளியாகும் என்றும் அத்தொடரின் படைப்புக்குழு தெரிவித்துள்ளது.
 
ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் நடித்துள்ள வெப்சீரிஸ் காட்மேன். இதை  திரைப்பட இயக்குனர் யோகேஸ்வரன் இயக்கி இருந்தார்.  ஜீ5 ஓடிடியில் ஜுன் 12ல் வெளியிட இருந்தனர்.
 
இதன் டீசர் கடந்த வாரம் வெளியானது. அதில் இந்து கடவுள் நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும் பிராமண சமூகத்தை இழிவுப்படுத்தி வசனங்களும், ஆபாச காட்சிகள் நிறைந்தும் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.
 
இந்து மத அமைப்புகளும், பிராமண அமைப்புகளும் கடும் கண்டனங்கள் தெரிவித்தன. இவை, இணையதளங்களில் கையெழுத்து இயக்கத்தையும் நடத்தின.
 
மேலும், சென்னை, மதுரை உள்ளிட்ட சில நகரங்களில் காவல்துறையில், புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த தொடரை தடை செய்ய வேண்டும். வெப்சீரிஸ்களுக்கு சென்சார் வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
 
இதையடுத்து அந்த டீசர் நீக்கப்பட்டது. மேலும் இந்த தொடர் வெளியாகாது என ஜீ5 தரப்பில் கூறப்பட்டுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா தெரிவித்தார்.
 
இந்நிலையில் இந்த வெப்சீரிஸ் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட போலீசார் காட்மேன் தொடரின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர்.
 
இந்நிலையில் அத்தொடரின் படைப்புக்குழு, “இது கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்” என தெரிவித்துள்ளது.
 
இது குறித்து படைப்புக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 380 நிமிடங்கள் கொண்ட இக்கதைத் தொடரின் முன்னோட்டமாக அமைந்த அந்த ஒரு நிமிட டீஸரில் இடம் பெற்றிருக்கும் வசனங்கள் தங்கள் சமூகத்தை அவமதிப்பதாக் கூறி தமிழ் நாடு பிராமண சங்கத்தை சேர்ந்தவர்க ள் ஒரு சில அதிதீவிர பிராமண சிந்தனையாளர்களால் தூண்டிவிடப்பட்டு இத்தொடரை தடைசெய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் வெவ்வேறு ஊர்களில் காவல் நிலையங்களில் குற்றப்பிரிவின் கீழ் புகார் அளித்திருக்கிறார்கள். சென்னையிலும் அவ்வகையில் பல்வேறு தனிமனிதர்களாலும், பிராமணசங்கங்களாலும் குற்ற வழக்குத் தொடர வேண்டும் எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இத்தொடரின் தயாரிப்பாளர் திரு.இளங்கோ ரகுபதிக்கும், இயக்குனர் திரு. பாபுயோகேஸ்வரனுக்கும் தமிழகம் மட்டுமல்லாமல், உலக அளவில் விரவியிருக்கும் பிராமணர்கள் ஒரு அமைப்பாக திரண்டு தொலைபேசி மூலம் தொடர்புக கொண்டு அச்சுறுத்தும் வகையில் கீழ்தரமான வார்த்தைகளில் வசைப்பாடியிருக்கிறார்கள்.இந்தத் தொந்தரவு ஒரு திட்டமிட்ட நிகழ்வாக அடுத்த நான்கு ஐந்து தினங்களுக்கு 24மணி நேரமும் தொடர்ந்திருக்கிறது.
 
காட்மேன் படத்தயாரிப்பாளரை ஒரு கிருஸ்தவக்கைகூலி என சித்தரிக்கும் வேலையைச் செய்ததோடு இத்தொடரின் தயாரிப்பாளருக்குப் பின்னால் பெரும் மதக்கலவரைத்தை தூண்டுவிடும் சதியிருப்பதாகவும் வதந்தியைப் பரப்பிருக்கிறார்கள்.
 
கோயம்புத்துர் கோவிலில் பன்றிக்கறியை வீசி மதக்கலவரத்தைத் தூண்ட முயன்ற ஹரி இன்னும் இந்து ஆசாமி இவர்தான் என்று இளங்கோவனின் படத்தை சமூக வலைதளங்களில் பதிந்திருக்கிறார்.
 
மேலும் சுப்ரமணியன்சுவாமி உள்ளிட்ட பிராமிண சமூகத்தை ச் செர்ந்தவர்கள் தங்களுக்கு இருக்கும் மத்திய அரசின் தொடர்பைப் பயன் படுத்தி zee5 நிறுவன உரிமையாளர்களையும் அச்சுறுத்தி இத்தொடரை வரவிடாமல் செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வெற்றிக்களிப்புடன் பதிவிட்டு வருகிறாரகள்.
 
காட்மேன் தொடரை திரையிடுவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக zee5   ஜூன் 1ஆம் தேதி அறிவித்தது. அன்று  சென்னை மத்திய குற்றவியல் அலுவலகத்தின் சைபர் பிரிவில் உலக பிராமண சங்கத்தின் தலைவர் சிவநாராயணன் அய்யர் என்பவர் கொடுத்த புகரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு 153,153[a]153A[1] [b]295A 504,505[1] [b]505 [2] IPC ஆகிய பிரிவுகளின் கீழ் தயாரிப்பாளர் இளங்கோ ரகுபதி மற்றும் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மீது கிரிமினல் வழக்கு தொடரப்ட்டிருக்கிறது.
 
குறிப்பிட்ட அந்த டீஸ்ரில் இடம் பெற்றிருந்த வசனங்களின் உன்மைத் தன்மை என்ன, ஒட்டுமொத்த வெப்சிரீஸின் கதை என்ன, கதாபாத்திரங்களின் தன்மை என்ன என்பதைப் பற்றியெல்லாம் புரிதலும் இல்லாத நிலையில் இப்படி ஒரு வெப்சீரீஸ்- பிராமண சமூகத்திற்கும் இந்து மதத்திற்கும் எதிரானது என்னும் கருத்தை உருவாக்கி அந்தப் படைப்பையே தடைகோரும் பாசிச நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இத்தகைய பிராமண சங்கங்கள் மற்றும் செல்வாக்கு மிக்க தனிநபர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த ஊடக உலகமும் திரளவேண்டிய அபாயகரமான சூழல் இப்போது உருவாகியிருக்கிறது.
 
இவர்களின் இந்த பயங்கரவாத நடவடிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19-1-A [1949] நமக்கு அளித்திருக்கும் கருத்து சுகந்திர உரிமைய முற்றிலுமாகப் பறிக்கிறது. இவர்களின் இந்தநடவடிக்கை அனுமதிக்கப்பட்டு இந்தக் ’காட்மேன்’வெப்சீரீஸ் ஒருவேளை முற்றிலுமாக தடைபடுமேயானால், நம் படைப்பு சுதந்திரமே கேள்விக்குறியாகி, எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும் தலையிட்டு எந்தப் படைப்பையும் திரைக்கு வருமுன் தடுத்து நிறுத்திவிடலம் என்னும் நிலை ஏற்படலாம்.
 
இதைத் தடுக்கும் விதமாக,  ‘காட்மேன்’செப்சீரீஸ்  zee5 செயலியில் வெளியாவதற்கு உறுதுனையாகவும் இந்தியாவில் ஜனநாயகச் சூழலை தொடர்ந்து நிலைநிறுத்தும் முயற்சியாக நாம் அனைவரும் இணைந்து ஒன்றிணைந்து எதிர்ப்பளர்களின் சதியையும் மூர்க்கத்தையும் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
 
அவ்வகையில் இந்த் கோரிக்கை விண்ணப்பத்தையே ஒரு கையெழுத்து இயக்கமாக மாற்றி, இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் பிரதமர் மற்றும் முதல்வர் கவனத்துக்கும் கொண்டு செல்வோம்.
 
இதன் மூலம் ஸீ 5 நிறுவனம், காட்பாதர் வெப் தொடரை எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல், வெளியிடுவதற்கு வலு சேர்ப்போம்!” என்று அந்த அறிக்கையில், “காட்மேன்” வெப்தொடர் படைப்புக்குழு தெரிவித்துள்ளது.
 

Related Posts