“உஸ்தாத் பகத் சிங்” திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 

 “உஸ்தாத் பகத் சிங்” திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 

பவர் ஸ்டார் பவன் கல்யாண், ஹரிஷ் சங்கர், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து வழங்கும் அதிரடி திரைப்படம் “உஸ்தாத் பகத் சிங்” படத்தின் பிரமாண்ட முதல்கட்ட படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது!

ரசிகர்களே தயாராகி கொள்ளுங்கள் அதிரடியான திரை விருந்து தயாராகி வருகிறது. பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் ஷங்கரின் வெற்றிகரமான கூட்டணியில், உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் ஹைதராபாத்தில் பரபரப்பாகப் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த இடைவெளியில் தயாரிப்பாளர்கள் ரசிகர்களை உற்சாகமூட்டும் விதமாக சில படங்களை பிரத்தியேகமாகப் பகிர்ந்துள்ளனர்.

இந்த போஸ்டர்களில் பவன் கல்யாண் அடர்ந்த இருள் பின்னணியில், காக்கி உடையில் அசத்தலாகக் காட்சியளிக்கிறார், மேலும் ஒரு போஸ்டரில் அவர் இயக்குநர் ஹரிஷ் ஷங்கருடன் தீவிரமாக உரையாடுவதைக் காணலாம், மற்றொரு போஸ்டரில் அவர் செட்டில் உலாவுவதைக் காணலாம்.

மைத்ரி மூவி மேக்கர்ஸின் நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர், உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தைப் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள், முன்னணி இளம் நடிகை ஸ்ரீலீலா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்கிறார், ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். எடிட்டிங் சோட்டா K பிரசாத் செய்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டண்ட் டைரக்டர்களான ராம்-லக்ஷ்மண் மேற்பார்வையிடுகிறார்கள்.

Related Posts