thangalaan: “ஐந்து முறை ட்ரீட்மெண்ட் எடுத்தேன்!”: நடிகை மாளவிகா மோகனன்
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’. ஆகஸ்ட் 15 அன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல் (கே.ஜி.எஃப்) சுரங்கங்களில், பற்பல ஆண்டுகளுக்கு முன், அடிமைகளாக வேலை செய்த, தமிழர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் இது.
இதற்காக கே.ஜி.எஃப் சுரங்கள் இருந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகிறார் நடிகை மாளவிகா மோகனன்.
இந்நிலையில் தங்கலான் படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவர், “கோலார் பகுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடந்தது. கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடக்கும் குடையைக் கூட மறந்து நடிப்பில் மூழ்கினேன்.
தினமும் 5 மணி நேரம் உட்கார்ந்து மேக் அப் போட வேண்டியிருக்கும். அதே மேக் அப்பில் 10 மணி நேரம் வரை இருக்க வேண்டும். எல்லாவற்றையும் மறந்து படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுவோம். எல்லாம் முடித்துவிட்டு அறைக்குத் திரும்பும்போதுதான் எங்கெங்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. தோலில் என்னென்ன பிரச்னைகள் வந்திருக்கிறது என்பது தெரியும்.
படப்பிடிப்பு முடிவதற்குள் 5 முறை டாக்டரை பார்த்திருப்பேன். கண்களுக்கு, தோலுக்கு எனப் பல முறை டாக்டரை பார்க்க வேண்டியிருந்தது” என்றார் மாளவிகா மோகனன்.
