‘தளபதி 69’ல் சத்யராஜ் நடிக்க மறுத்தாரா.. உண்மை காரணம் என்ன?

‘தளபதி 69’ல் சத்யராஜ் நடிக்க மறுத்தாரா.. உண்மை காரணம் என்ன?

கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் எச்.வினோத் இயக்க விஜய் நாயகனாக நடிக்கும் புதிய படம் துவங்கப்பட்டு உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ‘விஜய் 69’ என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பூஜை செப்டம்பர் 4 அன்று சென்னையில் நடைபெற்றது. செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது.ஒரு பாடலைப் படமாக்கியதோடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அடுத்தகட்டப் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.

இந்நிலையில்,இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க நடிகர் சத்யராஜை அணுகியதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே விஜய்யுடன் தலைவா,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் சத்யராஜ்.

னால் இந்தப்படத்தில் நடிக்க சத்யராஜ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

“விஜய் அரசியல் கட்சி தொடங்கிவிட்டார். இந்தப்படத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவரையும் அவருடைய கட்சியையும் போற்றிப் புகழும்படி வசனங்களோ காட்சிகளோ இடம்பெறும். அல்லது பின்னணியில் அவருடைய கட்சிக் கொடியையோ பதாகையையோ வைத்துவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

அப்படி இருக்கும்போது அவருடைய கட்சியை விளம்பரப்படுத்தும்படியாக நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தே அவர் நடிக்க மறுத்துவிட்டார்” என்று ஒரு தகவல் உலவுகிறது.

அதே நேரம், “சத்யராஜ் தீவிர பெரியார் பற்றாளர். ஆனால் பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினியின் கூலி படத்தில் நடிக்கிறார். காரணம், கொள்கை கோட்பாடுகளை சினிமாவில் எதிர்பார்க்க முடியாது என அவரே பல முறை கூறி இருக்கிறார்.

கடந்த வருடம் எஸ்.எஸ். மியூசிக் சேனலுக்கு அளித்த பேட்டியிலும்கூட ‘கொள்கை கோட்பாடுகளை சினிமாவுக்குள்ள கொண்டுவர முடியாது, பெரும்பாலான படங்களில் கடவுள் நம்பிக்கை உள்ளவனா நடிச்சிருக்கேன்.. பர்சனல் ஐடியாலஜியை கதைக்குள்ள கொண்டு வர முடியாது.. நடிப்பதற்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கு.. ஒரு அப்பா.. சும்மா அப்பாவா வர முடியாது.. நடிக்க ஸ்கோப் இருக்கணும்….. குணச்சித்திரம் இருக்கணும்…. கேரக்டர்சேசன்.. இருக்கணும்..! அது இருந்தா சின்ன பட்ஜெட் பெரிய பட்ஜெட் , இந்த டைரக்டர் அந்த நடிகர்னு பார்க்கிறதில்ல.! பத்து சீன்ல அத்தனையிலும் கைதட்டல் வாங்க முடியாது.. ரெண்டு சீன்லயாவது ஸ்கோர் பண்ண முடியுானு பார்ப்பேன். அப்படி இருந்தா நடிப்பேன்” என்று கூறி இருக்கிறார்.

ஆகவே விஜய் படத்தில் சத்யராஜ் நடிக்க மறுத்து இருந்தால், அதற்கு கொள்கை, கோட்பாடு காரணமாக இருக்காது.. வேறு காரணமாக இருக்கும்” என்றும் கூறப்படுகிறது.

இதை உறுதி செய்வதுபோல, சம்பள விசயத்தில் உடன்பாடு ஏற்படாததால் சத்யராஜ் நடிக்க மறுத்ததாகவும் ஒரு தகவல் இப்போது உலவ ஆரம்பித்து இருக்கிறது.

“கொள்கை கோட்பாடு எல்லாம் சினிமாவுக்குள்ள கிடையாது”  என சத்யராஜ் அளித்த பேட்டி…

https://www.youtube.com/watch?v=JRT-Mr8LfYc