100வது நாளில் கெத்து காட்டிய ‘தாய்க்கிழவி’… இயக்குநருக்கு பரிசளிக்கப்பட்ட பம்பர் கார்!

100வது நாளில் கெத்து காட்டிய ‘தாய்க்கிழவி’… இயக்குநருக்கு பரிசளிக்கப்பட்ட பம்பர் கார்!

திரையரங்குகளில் மாபெரும் வெற்றி நடைபோட்டு சாதனை படைத்துள்ள தாய்க்கிழவி திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா, மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

திரையில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்த நடிகர்கள் முதல், திரைக்குப் பின்னால் இரவு பகலாக உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவருக்கும் மேடையில் கௌரவக் கேடயங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. படம் வெற்றிபெற மிக முக்கியக் காரணமாக அமைந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மறக்க முடியாத வகையில் கேடயங்கள் வழங்கி மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த விழாவின் உச்சகட்ட சிறப்பம்சமாக, படத்தின் வெற்றிக்கு வித்திட்ட இயக்குனர் சிவக்குமார் முருகேசனுக்கு, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் புதிய கார் ஒன்று பரிசாக வழங்கி அதிரடி ஆச்சரியம் அளித்தனர். உழைப்புக்குக் கிடைத்த இந்த மாபெரும் பரிசைக் கண்டு விழாவில் பங்கேற்ற அனைவரும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்த தாய்க்கிழவி குழுவினருக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.