‘மொத ராத்திரி’ தேவி டூ தனுஷ், வெற்றிமாறன் படங்கள்… கெத்தாகக் களம் இறங்கும் பானுப்பிரியா
‘மொத ராத்திரி’ படத்தில் தேவி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் பானுப்பிரியா. சின்ன வயசிலிருந்தே சினிமா கனவுகளோடு லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தவர். பக்ருதீன் மாஸ்டரின் நாடகக் குழுவிலும் முன்னணி மீடியா நிறுவனங்களிலும் பணியாற்றிவிட்டு அப்படியே திரையுலகில் தடம் பதித்திருக்கிறார்.
தனது கலைப்பயணம் குறித்து அவர் பேசும்போது, “பக்ருதீன் சார் மூலமாகத்தான் ‘கூழாங்கல்’ வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் சர்வதேச அரங்கில் விருதுகளைக் குவிக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அடுத்து ‘தாய் கிழவி’ படம் என் பயணத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியது. இப்போது ‘மொத ராத்திரி’ படத்தில் பக்ஸ் சாரின் மனைவியாக தேவி வேடத்தில் நடித்ததற்கு செம பாராட்டுகள் குவிகிறது.
அடுத்து வெற்றிமாறன் சாரின் ‘ராஜன் வகையறா’ படத்தில் கிஷோர் சாரின் மனைவியாக நடிக்கிறேன். சந்தானம் சாரின் ‘லவ் பைட்’, ‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி – தனுஷ் கூட்டணியின் ‘ஓம்’, இயக்குநர் மாரி செல்வராஜின் புதிய படம் எனத் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய இயக்குநர்களின் படைப்புகளில் நானும் இருப்பது ரொம்பவே ஹேப்பி” என்று பூரிக்கிறார்.

