விஜயைக் குறிவைத்த ‘தாய் கிழவி’ ராதிகா, நடிகர் சிவகார்த்திகேயன்?

விஜயைக் குறிவைத்த ‘தாய் கிழவி’ ராதிகா, நடிகர் சிவகார்த்திகேயன்?

ரு இடைவெளிக்குப் பிறகு, தமிழ்த் திரையுலகில் ஒரு ‘ரியல்’ வெற்றி விழா நடந்தது… அது ‘தாய் கிழவி’ திரைப்படத்திற்கு! வழக்கமான காதல், மோதல், மசாலா என இல்லாமல், நிஜ மனிதர்களைக் கதாபாத்திரங்களாக உலவவிட்ட திரைப்படம் இது. வணிக ரீதியாகப் பெரும் வெற்றி பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் மக்களின் பேராதரவோடு வெற்றி நடை போடுகிறது. வெளியான பத்தே நாட்களில் 50 கோடி ரூபாய் வாரிக் குவித்துள்ளது. இந்த நிலையில், படத்தின் வெற்றி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ராதிகா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் பேசியது, மறைமுகமாக விஜய்யைத் தாக்கியதோ எனத் தோன்றுகிறது.டிக்கெட் விலை சர்ச்சை: ராதிகாவின் அட்டாக்!

ரஜினி, அஜித், விஜய் என உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது பிளாக் டிக்கெட் விற்கப்படுவது சகஜம்தான். அதிலும், விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு இந்த பிளாக் டிக்கெட் குற்றச்சாட்டு அவர் மீது அதிகமாக வீசப்படுகிறது. இந்த நிலையில், விழாவில் பேசிய ராதிகா, “சில பெரிய ஹீரோக்களின் படங்கள் 2000 ரூபாய்க்கு டிக்கெட் விற்றுப் பெரும் தொகையை வசூலிக்கும். ஆனால், வெறும் 150 ரூபாய் டிக்கெட்டில் 50 கோடி வசூலித்திருக்கும் இந்த ‘தாய் கிழவி’யின் வசூல்தான் அதைவிடப் பெரியது!” என்றார். இதுதான் விஜய்யைக் குறிக்கிறதோ என நினைக்க வைக்கிறது.குடும்ப உறவுகள்: எஸ்கே கொடுத்த ‘பாச’ப் பாடம்!

பிளாக் டிக்கெட் புகார் போல, விஜய் மீது வீசப்படும் இன்னொரு குற்றச்சாட்டு, குடும்பத்தினர் மீது அவருக்குப் பாசமோ, பற்றோ இல்லை என்பது. அவர் தன் தாய், தந்தை மற்றும் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து வாழ்கிறார் என்ற விமர்சனங்கள் உள்ளன. இந்த விழாவில், இதற்குப் பதில் சொல்வது போல அமைந்தது சிவகார்த்திகேயனின் பேச்சு.

அவர் பேசுகையில், “அப்பா இறந்த பிறகு என்னையும் அக்காவையும் படிக்க வைத்து, கல்யாணம் செய்து வைத்து ஆளாக்கியவர் அம்மாதான். பிறகு என் அக்கா. ‘படைக்க, காக்க, அழிக்க என ஆண்களைக் கடவுளாகக் காட்டியவன், படிப்புக்கும் பணத்துக்கும் பொம்பளையைத்தான் காட்டிக் கும்பிடச் சொன்னான்’ எனப் படத்தில் ஒரு வசனம் வரும். அதை நான் முன்பே உணர்ந்துவிட்டேன் என நினைக்கிறேன். இதுநாள் வரை என் வரவு, செலவு அனைத்தையும் ஆர்த்திதான் பார்த்துக் கொள்கிறார். அவர் இல்லை என்றால் புரொடக்‌ஷன் எல்லாம் நான் செய்திருக்க முடியாது. இவர்கள் எல்லாரும்தான் என் பவுனுத்தாயி. இதுபோல, உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பவுனுத்தாயிகளுக்கும்தான் இந்தப் படம்” என்று எஸ்கே உருகினார்.

அது மறைமுகமாக குடும்ப உறவுகளைக் கைவிட்டவர்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரையாகவே பார்க்க முடிகிறது.

Related Posts