”கொரோனா எதிரொலி’’ தஞ்சை பெரிய கோவில் மூடல்!

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி கோவில் இன்னும் சற்று நேரத்தில் மூடப்பட இருப்பதாகவும் கோவிலில் இருக்கும் சுற்றுலாப் பயணிகள்,பக்தர்கள்,உள்ளூர் வாசிகள் அனைவரையும் அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.

ஒலிபெருக்கி வழியாக அங்கு இருக்கும் பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.  இன்று முதல் இம்மாதம் 31ம் தேதி வரை கோயில் மூடப்பட்டிருக்கும் எனவும்’ எப்போதும் போல் நான்கு கால பூஜைகள் நடைபெறும்  அதில் எந்த மாற்றமும் இல்லை.

வெளியில் இருந்து வரும் பக்தர்கள், மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி மறுப்பு என்று இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் பக்தர்களுக்கும் கோவில் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரப்பரப்பானது. பின் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் சுற்றுலா பயணிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.