’’கொரோனா பீதி’’ நயன்தாரா படப்பிடிப்பு நிறுத்தம்!
2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகர் அஜ்மல். அதைத் தொடர்ந்து அஞ்சாதே, இரவுக்கு ஆயிரம் கண்கள், கோ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். எந்த ஒரு கதாப்பாத்திரமானாலும் தனது பன்முகத்தன்மையை நிரூபித்து காட்டுபவர். நல்ல நடிகர் எனும் பெயரை பெற்றவர்.
ரௌத்திரம் மிக்க இளைஞனாக “அஞ்சாதே”, ஸ்டைலீஷான புத்திசாலி வில்லனாக “இரவுக்கு ஆயிரம் கண்கள்” என தான் நடிக்கும் அனைத்து படங்களிலும், வித்தியாச நடிப்பை தந்து, அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் நடிகராக விளங்கி வருகிறார் அஜ்மல்.
கதையின் நாயகியாக, லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தர்பாருக்கு அடுத்து அவரது நடிப்பில் உருவாகி வரும் “நெற்றிக்கண்” இந்த திரைப்படத்தில் மிக முக்கியமாக கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் அஜ்மல். மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக, பலவித திருப்பங்கள் கொண்ட இப்படத்தில் பெரும் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது வரை “நெற்றிக்கண்” படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது. கொரானோ வைரஸ் பாதிப்பினால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

