வெற்றிமாறன் – விமல் – போஸ் வெங்கட் கூட்டணியில் ‘சார்’ திரைப்பட டீசர்….

வெற்றிமாறன் – விமல் – போஸ் வெங்கட் கூட்டணியில் ‘சார்’ திரைப்பட டீசர்….

தமிழ் திரையுலகில் சந்தை மதிப்பு கொண்டிருக்கும் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விமல் கதையின் நாயகனாக நடித்திருக்கும்சார்எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி மற்றும் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

கன்னி மாடம்எனும் படத்தை இயக்கிய இயக்குநரும், நட்சத்திர நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி இருக்கும்சார்எனும் திரைப்படத்தில் விமல், சாயாதேவி கண்ணன், சிராஜ் எஸ், சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இனியன் ஜே. ஹாரீஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார்அரசாங்க பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். சிராஜ் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி நிறுவனம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறன் வழங்குகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்தத் திரைப்படத்திற்கு முதலில்மா பொ சிஎன பெயரிட்டிருந்தனர். இதற்கு மறைந்த தமிழறிஞர் மா. பொ சி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே படத்தின் தலைப்பைசார்என மாற்றினர்.

இந்தப் படத்தின் டீசரில் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியை அளிக்கும் பாடசாலையை இடித்து தள்ள அக்கிராமத்தில் வாழும் ஆதிக்க சாதியினர் முயற்சிப்பதும் அதனை அந்தப் பாடசாலையில் மாணவர்களுக்கு கல்வியை கற்பிக்கும் ஆசிரியரான நாயகன் எதிர்ப்பதுமான காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும், டீசரின் தொடக்கத்தில்என்னால் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது. அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே முடியும்எனும் தத்துவஞானி சாக்ரடீசின் மேற்கோள் இடம் பிடித்திருப்பதாலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Related Posts