தேர்தல் சீசனில்,ஜீ5 வழங்கும் ‘தலைமைச் செயலகம்’ டீசர் வெளியீடு!

தேர்தல் சீசனில்,ஜீ5 வழங்கும் ‘தலைமைச் செயலகம்’ டீசர் வெளியீடு!

இந்த தேர்தல் சீசனில், ZEE5 மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து வழங்க, ‘சலார்’ புகழ் ஸ்ரேயா ரெட்டி நடிப்பில், உருவாகியிருக்கும் ‘தலைமைச் செயலகம்’ சீரிஸின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது !

தலைமைச்செயலகம் சீரிஸை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார், தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன், பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தலைமைச்செயலகம் சீரிஸை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார், தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன், பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்~

 

தலைமைச் செயலகம் சீரிஸ் மே 17 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது ~

 

இந்தியா, மே 3, 2024: இந்தியாவின் முன்னணி ஒடிடி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, மிகவும் எதிர்பார்ப்பிலுள்ள தமிழ் சீரிஸான ‘தலைமைச் செயலகம்’  சீரிஸின் டீசரை இன்று வெளியிட்டது – அதிகாரத்தின் கோரத்தைப் பற்றிப்பேசும் அழுத்தமான அரசியல் திரில்லராக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.  இந்த சீரிஸை, ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமாருடன் தயாரித்துள்ளார். கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ளார்.  இந்த 8-எபிசோடுகளாக இந்த சீரிஸ் வெளிவரவுள்ளது. இது தமிழ்நாட்டின் அரசியல் களத்தின் பின்னணியில் லட்சியம், துரோகம் மற்றும் போராட்டம் மிகுந்த ஒரு பெண்ணின் அதிகார வேட்கையின் கதையைச் சொல்கிறது. ‘தலைமைச்  செயலகம்’ மே 17 அன்று பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்படும்.

 

தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலிக்கு  ஆசைப்படுவதோடு அதற்காகத்  தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில், ஜார்க்கண்டில் உள்ள ஒரு தொலைதூர சுரங்க கிராமத்தில், சிபிஐ அதிகாரி நவாஸ் கான் இரண்டு தசாப்தங்கள் பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார். பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு குறித்து விசாரணையைத் தொடங்குகிறார். இந்த கதை விரிய விரிய  வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, காலத்தால் மறைக்கப்பட்ட மறந்துபோன உண்மைகளின் மீது ஒளி பாய்ச்சுகிறது.

 

டிரெய்லர் :

https://youtu.be/Lnpt4snCUaM

 

ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் கூறுகையில்…,

“தலைமைச் செயலகம்’  சீரிஸை உலகம் முழுவதும் ZEE5 உடன் இணைந்து வெளியிடுவது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த சீரிஸ் தமிழக அரசியலின் தீவிரமான பக்கத்தைப் பேசுவதுடன், தேசிய அளவிலான அடித்தட்டு தொழிலாளர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் பக்கங்களை நுணுக்கமாகப் பேசுகிறது. அரசியல் மரபுகளுக்குக் கட்டுப்படாத ஒரு பெண்ணின் எழுச்சியை எதிரொலிக்கும் கதை தான், ‘தலைமைச் செயலகம்’. இந்த சீரிஸ் அரசியல் சித்தாந்தங்களை வடிவமைப்பதில் பெண்களின் முக்கிய பங்கைச் சித்தரிக்கிறது. கொற்றவை, துர்கா மற்றும் அபிராமி ஆகியோரின்  கதைகளை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதன் மூலம், ஒரு பெரும் உரையாடலைத் தூண்டுவதையும், அரசியல் பற்றிய புரிதலை உண்டாக்குவோம் என நம்புகிறேன்.

 

இயக்குநர் வசந்தபாலன் கூறுகையில்.., “அரசியல் அரங்கில் உலக விதிகள் எதுவும் பொருந்தாது. மத்திய அரசு, மாநில அரசுகளின் குரல்களைக் கூர்ந்து கவனிக்கும்போது, மாநிலத்தின் அடிப்படைத் தேவைக்கான குரலாக அவை மாறிவிட்டன என்பதைப் புரிந்து கொள்ளும்போது  புதிய அரசியல் பிறக்கும். சுயாட்சி, மாநில தன்னிறைவு மற்றும் மக்கள் உரிமைகள் போன்றவற்றில், ஊழல், ஊழலின் ஆபத்துகள், ஜனநாயகப் போராட்டத்தின் சமரசங்கள் போன்றவற்றால் கறை படிந்த அரசாக, தன் மாநில மக்களின் நலனைக் காக்கும் அரசைப் பார்க்கும் முயற்சிதான் தலைமைச் செயலகம். ஒரு மாநில முதலமைச்சரின் பார்வையில் ஆயுதப் போராட்டங்களின் ஆபத்துக்களைப் பற்றிப் பேசுகிறது இந்தக்கதை.”

 

கொற்றவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ரேயா ரெட்டி கூறுகையில், ‘தலைமை செயலகம்’ படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில்  நான்  மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், மேலும் Zee5 உடன் இணைந்து இந்த சுவாரஸ்யமான கதையைப் பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘நாம் எதிரிக்கு எதிராகக் கத்தியுடன் நின்றால், அவர்கள் பல கத்திகளால் திருப்பி அடிப்பார்கள்’ என்ற கொற்றவையின் மேற்கோள் அவரது கதாபாத்திரத்தின் தன்மையைச் சொல்லி விடும்.  அமைதியான குணம், தன்னம்பிக்கை மற்றும் உள்ளுணர்வுகள் மூலம் ஸ்திரமற்ற அரசியலைக் கணிக்கும் அவள், ஆபத்தான நட்புகளைத் தாண்டி, தமிழக அரசியலில் பயணிக்கிறாள்.  தமிழக அரசியலின் முகத்தை விவரிக்கும் இந்தக்கதையை ZEE5 இல் ரசிகர்களுடன் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தலைமைச் செயலகம்’ மே 17 அன்று ZEE5 இல் திரையிடப்படுகிறது!

ZEE5  பற்றி

ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.

மேலும் சமூகவலைதளங்களில்  ZEE5 ஐ தொடர:

Facebook – https://www.facebook.com/ZEE5

Twitter – https://twitter.com/ZEE5India

Instagram – https://www.instagram.com/zee5/

Related Posts