டாஸ்மாக் திறப்பு எச்சரிக்கும் ரஜினி..!

கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியதும் மத்திய மாநில அரசுகள் இணைந்து முழு ஊரடங்கு பிறப்பித்தது. வனிகநிறுவனங்கள், மால், பள்ளி, கல்லூரி முதல் அனைத்தும் மூடப்பட்டன. இதோடு டாஸ்மாக் கடைகளும் மார்ச் 25 முதல் மூடப்பட்டது. 

கொரோனா தொற்று சென்னையில் அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் மாதுபானக்கடைகளை திறப்பது என அரசு முடிவெடுத்து சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மே 8 தேதி கடைதிறக்கப்பட்டது.

 மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று முட்டி மோதி பாட்டிகளுடன் போஸ் கொடுத்தனர். பொருளாதாரரீதியில் முடங்கி இருக்கும் நடுத்தர மற்றும் ஏழைமக்கள் இந்த கடைதிறப்பால் பாதிக்கப்பட்டு பல போராட்டங்களை நடத்தினர்.

கொரோனா வைரஸ் காரணமாக முடங்கியிருக்கும் மக்களின் வாழ்வாதாரம். இதப்பற்றி எல்லாம் கவலைப்படாத அரசைக் கண்டித்து பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும்கனவை மறந்து விடவேண்டும். தயவு கூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளைப் பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Related Posts