பரிசோதனை என்ன? பாரதிராஜா விளக்கம்
கொரோனா சென்னையில் தீவிரமடைந்து வருவதால் இங்கிருந்து யார் வெளி மாவட்டங்களுக்கு சென்றாலும் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப் படுகின்றனர். திரைப்பட இயக்குநர் பாரதிராஜா சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றுருந்தார். அங்கு அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன. சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் இங்கிருந்து சென்ற பாரதிராஜா மற்றும் அவரது உதவியாளர்கள் மூன்று பேர் தேனியில் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்று சளி மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டதாக அவகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று அவது வீட்டில் அல்லிநகரம் நகராட்சி சார்பாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இது குறித்து பாரதிராஜா வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது தன்னை யாரும் தனிமைப் படுத்தவில்லை. மக்கள் நலன் கருதியே தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் தங்களுக்கு மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. ஆகவே நாங்கள் மகிழ்ச்சியுடன் அடுத்தப் படத்திற்கான வேலையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.