‘அது’க்கு ஒரு லட்ச ரூபாய்! அதிரவைத்த அதுல்யா!
கோவை பெண்ணான, அதுல்யா ரவி, ‘ காதல் கண் கட்டுதே’ படம் வாயிலாக, தமிழ்த்திரையில் தடம் பதித்தார்.
தொடர்ந்து, ‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் நடித்தார். இடையில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில், ‘கேப்மாரி’ படத்தில் படு கிளாமராக நடித்து பரபரப்பாக பேசப்பட்டார்.
தற்போது இவர் மீது பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.
ஸ்ரீதர் வெங்கடேசன்.. இயக்கத்தில் சந்தோஷ் பிரதப் மற்றும் அதுல்யா ரவி ஜோடியாக நடித்து பல விருதுகளை வென்ற திரைப்படம், ‘என் பெயர் ஆனந்தன்’.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இதையடுத்து படத்தின் பிரமோஷனுக்காக,போட்டோஷூட் எடுக்க படக்குழு திட்டமிட்டது.
ஆனால் அதுல்யாவோ, “இதற்கு தனியாக ஒரு லட்ச ரூபாய் தந்தால்தான் வருவேன்!” என்று அதிரடியாக கூறிவிட்டதாக படத்தின் இயக்குநர் ஸ்ரீதர் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசியபோது, “அதுல்யா பிரபலம் ஆவதற்கு முன்னரே ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு நடந்த படம் இது. பிறகு சிறிது பிரபலம் ஆனவுடன் வேறு மாதிரி நடந்துகொள்கிறார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். படத்தின் செய்திகளைக் கூட தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர மறுக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக முற்றிலும் முடங்கிப்போயிருந்த திரையுலகம் இப்போதுதான் மெல்ல எழ ஆரம்பித்திருக்கிறது. இந்த நேரத்தில் படத்தின் வெளியீட்டுக்கு உதவாமல் முரண்டு பிடிப்பது நியாயமா?” என்கிறார் ஸ்ரீதர்.