’சுஷாந்த் சிங்’ கடைசி படம்! பாடல் வெளியீடு

 திரைத்துறைக்கு வந்து பெரும்பாலும் ஹிட் படங்களை மட்டும் கொடுத்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 2013-ம் ஆண்டு வெளியான Kai Po Che படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானர். குறுகிய காலத்திலேயே நட்சத்திர அந்தஸ்துக்கு  தன்னை உயர்த்திக் கொண்டவர்.

சமீபத்தில் வெளியான தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப் பட்ட Dhoni the untold story படத்தில் அச்சு அசல் தோனியை போலவே நடித்து இந்தியா முழுவதும் புகழ் பெற்றார். அவரது 34 வயதிற்குள் முன்னணி இடத்தை பிடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து   கொண்டது பாலிவுட் திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 சுஷாந்த் நடித்த  கடைசி படம் தில் பெச்சாரே.  இந்தப் படத்தில் சுஷாந்த் ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். முகேஷ் சப்ரா இயக்கிய இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் டைட்டில் ட்ராக் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல மக்களிடையே வரவேற்பை பெற்றது.

தில் பெச்சாரே படத்தின் “தாரே கின் ” இரண்டாவது பாடலை மோஹித் செளஹான் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர் . பாடல் வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். மனதை மயக்கும் இப்பாடல் தற்போது வெளியாகி உள்ளது .ஜுலை 24-ம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் – OTTதளத்தில் “தில் பெச்சாரே ” வெளியிடப்படுகிறது .  இதைப் பார்ப்பதற்கு சுஷாந்த் உயிருடன் இல்லை என்பது வருத்தமாகவே உள்ளது.

https://youtu.be/pr-4GbR4DpQ

 

Related Posts