சிறை:“வெளியானவுடன் ஒரு அதிசயம நடக்கலாம்!!”: விக்ரம் பிரபு ட்விஸ்ட்!
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சிறை’. இப்படத்தில் யாரிப்பாளர் லலித் குமாரின் மகன்எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
விக்ரம் பிரபுவை வைத்து `டாணாக்காரன்’ என்கிற படத்தை இயக்கிய தமிழ கதை எழுதி இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்து உள்ளார்.
இப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில், நேற்று சென்னையில் நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “என் 25-வது படம் 25-ம் தேதி வெளியாகிறது. என்னுடைய டாணாக்காரன் படக்குழுவுடன் மீண்டும் சேர்ந்து பயணித்தது பெரும் மகிழ்ச்சி.
`டாணாக்காரன்’ படத்தின் இயக்குநர் தமிழ் அவரின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதைதான் `சிறை’. நல்ல படம், நல்ல கதை எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். டாணாக்காரன் தியேட்டரில் வெளியாகவில்லை. ஆனால், `சிறை’ தியேட்டரில் வெளியாகிறது. இதுவே பெரிய சந்தோஷம்.
அந்தப் படத்தின் கதை வேறு… அதில் வரும் போலீஸ் கதாபாத்திரம் வேறு. இந்த சிறை கதாபாத்திரம் வேறு. உங்களைப்போல நானும் ஒரு ஆடியன்ஸ்தான். வித்தியாசமாக எதாவது செய்ய வேண்டும் என அதற்காக உழைப்பேன். என் முதல் படத்திலிருந்தே என்னுடைய அணுகுமுறை அப்படித்தான் இருக்கும். `இவன் வேற மாதிரி’ – `அரிமா நம்பி’ இரண்டும் திரில்லர்தான்.
ஆனால் அடுத்தடுத்து வந்ததால ஒரே மாதிரியான படம்னு தோன்றியிருக்கலாம். இதற்கு நடுவில் ஒரு படம் நடித்தேன். அது அப்போது வெளியாகவில்லை. ஒரே மாதிரியான கதை எடுத்தால் எனக்கே போர்அடிச்சிரும். வேலூரில் அக்னி நட்சத்திரம் நேரம் `டாணாக்காரன்’ படப்பிடிப்பு நடத்தினோம். அப்போது முதல் கடுமையான உழைப்பைப் போட்டு படம் முடித்தோம். அதை தியேட்டரில் கொண்டுவர கடுமையாக கஷ்டப்பட்டோம். ஆனால் முடியவில்லை. இப்போது அதேப் படக்குழுவின் இந்தப் படம் தியேட்டரில் வருகிறது அதுவே மகிழ்ச்சி” என்றார்.
tamilankural.com சார்பில், “இது உண்மைக் கதை என்கிறீர்கள். நீங்கள் நடிக்கும் கதாபாத்திரத்தின் நிஜ மனிதரை சந்தித்தீர்களா” என்று கேட்டோம்.
அதற்கு விக்ரம் பிரபு, “படத்தின் கதையைக் கேட்டபோதே, அந்த மனிதரை சந்திக்க முடியுமா என்று கேட்டேன். அதற்காக முயற்சியும் செய்தோம். ஆனால் சம்பவம் நடந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. அவர் எங்கிருக்கிறார் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதே நேரம், படம் வெளியான பிறகு அவர் எங்களை தொடர்புகொள்ளலாம். அப்படி ஓர் அதிசயம் நடக்கலாம்” என ட்விஸ்ட் வைத்தார் விக்ரம் பிரபு.
