‘sir’: ‘கடவுளைகாட்டும்’ பா.ரஞ்சித், மாரி செல்வராஜ்!”: விளக்கம் கொடுக்கும் போஸ் வெங்கட்!

‘sir’: ‘கடவுளைகாட்டும்’ பா.ரஞ்சித், மாரி செல்வராஜ்!”: விளக்கம் கொடுக்கும் போஸ் வெங்கட்!

‘sir’: Pa. Ranjith, Mari Selvaraj who ‘shows God’!: Bose Venkat explaining!

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சார்’. எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ்.எஸ் தயாரித்திருக்கும் இப்படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகி உள்ளது.

இத்திரைப்படம் நாளை அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நேற்று இப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் இயக்குநர் போஸ் வெங்கட்.

அவரிடம், ” இது கடவுள் நம்பிக்கைக்கு எதிரான படமா” என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு போஸ் வெங்கட், “அசோக் நகர் அரசுப்பள்ளியில், மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு என்பவர் பேசியது சர்ச்சையானது. அந்த சம்பவம் உட்பட பல சம்பவங்களின் தொகுப்புதான் இந்தத் திரைப்படம்.

கல்வி வளர்ந்துவிட்டால் – இந்த உலகத்தின் அனைத்து சம்பவ தொகுப்பும் மண்டையில் இருந்தால் – யாராக இருந்தாலும், சாமி கும்பிடுவதை குறைச்சுக்குவான்.

ஆனா நான், சாமி கும்பிடாதீங்க என்றோ, சாமி இல்லை என்றோ கருத்து சொல்லலை. எனக்கு எது வாழ்க்கையில் முன்னேற நம்பிக்கை தருகிறதோ, மன நிறைவை தருகிறதோ அதுதான் எனக்கு சாமி. அது போட்டோவாகவோ கல்லாகக் கூடவோ இருக்கலாம்.

ஆனால் படிக்கக்கூடாது என்று சொன்னால், அது சாமி இல்ல.. ஆசாமி. இந்தப் படத்திலும் நாம சாமியை கொல்லலை.. படிக்கக்கூடாதுனு சொன்ன ஆசாமியத்தான் கொன்றிருக்கிறோம்” என்று பதில் அளித்தார்.

அவரிடம், tamilankural.com இதழின் சார்பாக, “சாதி இழிவுக்கு கடவுள் – மதம்தான் காரணம் என்பதை சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுகள். அதே நேரம், சாதியை எதிர்த்து படம் எடுக்கும்
பாரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் படங்களில் கடவுள் தொடர்பான காட்சிகள் உள்ளனவே. இதை எப்படி பார்க்கிறீர்கள்” என்று கேட்கப்பட்டது.

அதற்கு போஸ் வெங்கட், “சினிமாவுக்கு முன்னோடி மேடை நாடகங்கள். அதற்கும் முன்பாக கூத்துக்கலை. அதில், வள்ளித்திருமணம், அரிச்சந்திர புராணம் என கடவுள் சார்ந்த படைப்புகளே இடம் பெறும். அதிலும் நல்ல மெஸேஜ்கள் இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை.. என் படங்களுக்கு சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ ஆடியன்ஸ் வரக்கூடாது என நினைக்கிறேன்.

நான் பொதுவானவன். என் படத்தைப் பார்க்க சாதி, மதம் குறுக்கே இருக்காது.

சேகுவாரா, தந்தை பெரியார் என பல தலைவர்கள் சொன்னதுதான்… எவன் அடிபட்டு கிடந்தாலும் தூக்கி நிறுத்த வேண்டியது என்னுடைய.. உங்களுடைய… நம்முடைய பொறுப்பு” என்று பதில் அளித்தார் போஸ் வெங்கட்.

Related Posts