“விஜய் மாதிரி நான் இல்லே.. ஹீரோயின் தேவையில்லே..!” : சாந்தனு அதிரடி!
சாந்தனு நடித்துள்ள பல்டி திரைப்படம் பாசிடிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம் , ஷாந்தனு இரட்டை நாயகர்களாக தோன்றுகின்றனர். மேலும் ப்ரீத்தி அஸ்ராணி, செல்வராகவன் , அல்ஃபோன்ஸ் புத்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.
கபடியை மையப்படுத்திய ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள பல்டி திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பாசிடிவான விமர்சனத்தை பெற்று வருகிறது.
குறிப்பாக சாந்தனுவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. நேற்று செய்தியாளர்களுக்கான காட்சியிலும் சாந்தனுவை அனைவரும் பாராட்டினர். அதிரடி கதாபாத்திரத்தில் சண்டைக் காட்சிகளில் மிரட்டும் சாந்தனு, உணர்வுபூர்வமான காட்சிகளிலும் முத்திரை பதித்து உள்ளார்.
படம் முடிந்ததும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் தெரிவித்தவைே…
“என் அப்பா பாக்யராஜ், மிகப்பெரிய இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்.. அப்படி இருந்தும் தமிழில் எனக்கு தொடர்ந்து படம் வரவில்லையே என்று கேட்கிறார்கள். இப்போது இண்டஸ்ட்ரியில் வெற்றி தோல்விக்கான வரையறை மாறி உள்ளன. அதற்கேற்ப என்னை தகவமத்துக் கொள்கிறேன். அவரவர் வெற்றி தோல்வியே நிலைக்கும்.
இந்த பல்டி படத்தில் எனக்கு ஜோடி இல்லைதான். ப்ளூ ஸ்டார் படத்திலும் அப்படித்தான். ஒருவகையில் இது வசதியாகத்தான் இருக்கிறது.
பல்டி படத்தின் கிளைமாக்ஸில் விக்ரம் படத்தின் இறுதிக் காட்சியில் வரும் சூர்யா போலவும், விஜய் போலவும் இருப்பதாக கூறுகிறீர்கள். அப்படி இல்லை. காட்சிகள் அனைத்தையும் இயக்குநரே தீர்மானித்தார்” என்றார் சாந்தனு.

