அமெரிக்க தமிழ்ச் சங்க விழாவில் சீனு ராமசாமியின் கவிதை நூல் வெளியீடு

அமெரிக்க தமிழ்ச் சங்க விழாவில்  சீனு ராமசாமியின் கவிதை நூல் வெளியீடு

தேசிய விருது பெற்ற விஜய்சேதுபதியின் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை இயக்கி பிரபலமான சீனு ராமசாமி தொடர்ந்து ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’, ‘மாமனிதன்’, ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை டைரக்டு செய்துள்ளார். இன்னொரு புறம் கவிதை தொகுப்பு நூல்களை வெளியிட்டு கவிஞராகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சீனுராமசாமி எழுதிய ஆறாவது கவிதை தொகுப்பு எழுத்து பிரசுரம் வெளியிட்ட ‘மேகங்களின் பேத்தி’ எனும் நூல் அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் (fetna) 34-வது பேரவை விழாவில் வெளியிடப்பட்டது.இந்த நூலின் முதல் பிரதியை வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் தலைவர் விஜய் மணிவேல் வெளியிட முன்னாள் தலைவர் பால சாமிநாதன் பெற்றுக் கொண்டார். பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர் சு.வேணுகோபால் ஆகியோரும் நூலின் பிரதியை பெற்றுக் கொண்டார்கள்.

மேலும் சீனு ராமசாமி இயக்கிய ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படம் நடுவர் குழுவின் சி|றந்த படமாக தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இதுபோல் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குனர் விருதும் ‘வாழை’ படத்தை இயக்கி தயாரித்த மாரி செல்வராஜுக்கு சிறந்த தயாரிப்பாளருக்கான விருதும் வழங்கப்பட்டன

Related Posts