“மெய்யழகன் பட ரகசியம்….!”: அரவிந்த் சுவாமி கொடுத்த ஹிண்ட்!
’96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி இணைந்து நடிக்கும் படம், ‘மெய்யழகன்’.
இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய அரவிந்த்சுவாமி, “மிக அழகான இந்தக் கதையில்- அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் பிரேம் குமாருக்கு நன்றி.
இந்தப் படத்தில் ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்தேன். கார்த்தியும் நானும் ரொம்ப நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டோம்.
இந்தப் படம் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.
மேலும், “என்னைப் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், என்னைப் போல மாப்பிள்ளை வேண்டும் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். என்னைப் பற்றி தெரிந்தால் அவர்கள் அப்படியெல்லாம் சொல்லமாட்டார்கள்” என்று காமெடியாக சொன்னார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு ட்விஸ்ட்டும் வைத்தார்.
“மெய்யழகன் படத்தின் கதையை படித்ததும் இது என் வாழ்வில் நடந்த கதை என்கிற எண்ணம் ஏற்பட்டது. ஆமாம்… என் வாழ்வில் நடந்த, இன்னும் என்னை பாதித்துக் கொண்டிருக்கும் சம்பவம்.. இந்த கதையில் உள்ளது. இப்போது அதைப் பற்றிப் பேசக்கூடாது… படம் வெளியான பிறகு விரிவாக பேசுகிறேன்” என்றார், அரவிந்த் சுவாமி.