“விஜய் மாதிரி ஜெயிப்பேன்!”: சட்டென்று மாறுது வானிலை விழாவில் ஜெய் அதிரடி பேச்சு!
கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக்கே அரசியலும் சினிமாவும் தான்! முதல்வர் விஜய் ‘சர்கார்’ பட வேலையில் இருந்தபோது பாபு விஜய் கண்ட கனவு, இன்று ஒரு பிரம்மாண்டமான ரொமான்டிக் த்ரில்லராக உருவெடுத்துள்ளது. பிவி புரொடக்ஷன் தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை” உருவாகி இருக்கிறது.
இப்படத்திற்குக் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ரிச்சர்ட் M. நாதன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட்சன், கலை இயக்கம் S. கண்ணன்.
படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் களைகட்டியது. முருகதாஸ் சார், சசி சார் எனப் பெரிய இயக்குநர்கள் முன்னிலையில், டும் டும் டும் சத்தத்தோடு மேடையில் நடந்த அந்த அதிரடிப் பேச்சுகள்…
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன்: “பாபு விஜய்க்கும் எனக்குமான நட்பு ரொம்ப ஸ்பெஷல். ஒரு பைக் ரேஸர், வண்டியையும் ஓட்டிக்கொண்டு பெட்ரோல் கேனையும் சுமந்துகொண்டு வெற்றியை நோக்கி ஓடுவது எவ்வளவு கஷ்டமோ, அந்தச் சவாலைத் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் பாபு விஜய் கையில் எடுத்திருக்கிறார். அவருக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், சம்பளமே வாங்காமல் முழு உழைப்பைக் கொடுத்திருக்கிறேன்!”
உடை வடிவமைப்பாளர் கமலி & ஸ்டண்ட் மாஸ்டர் முரளி: கமலி, “ஜெய்க்கும் மீனாட்சிக்கும் காஸ்ட்யூம் டிசைன் பண்ணது நல்ல அனுபவம்” என்றார். முரளி மாஸ்டர் பேசுகையில், “பாபு விஜய் பாட்டுகளுக்குச் செய்திருக்கும் செலவைப் பார்த்தாலே அவர் அர்ப்பணிப்பு தெரிகிறது. ஜெய் ஆக்ஷன் காட்சிகளில் அண்ணன் விஜய் போலவே மிரட்டியிருக்கிறார். இசை ராவாக (Raw) வந்திருக்கிறது” எனப் பாராட்டினார்.
எடிட்டர் டார்லிங் ரிச்சர்ட்சன்: “நாங்கள் பாஃப்டா (BOFTA) மாணவர்கள். பாபு விஜய் செட்டில் ரொம்ப ஸ்வீட். 6 மணிக்கெல்லாம் பேக்-அப் சொல்லிவிடுவார். அட்லி சார், ரூபன் சாரிடம் கத்துக்கொண்ட வித்தைகளை இந்தப் படத்தில் இறக்கியிருக்கிறேன். ஜெய் சாருடன் மீண்டும் பணியாற்றுவது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம்!”
தொழிலதிபர் சிவகுமார் (முத்துராமன் குரூப்): “சினிமாவிலிருந்து ஒதுங்கி பிசினஸில் பிஸியாக இருந்த என்னை CFO சத்யநாராயணன் தான் இந்த விழாவுக்கு அழைத்தார். பாபு விஜய்யின் வேகத்தையும் நேர்மையையும் பார்த்தபோது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இவருடைய அடுத்த படத்துக்கு 100 கோடி முதலீடு செய்ய நான் இப்போதே தயார்!” என மேடையிலேயே ‘பிசினஸ் டீல்’ பேசி அதிர வைத்தார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன்: “முதல்வர் விஜய் சாரின் கேரியரை உயர்த்திய முருகதாஸ் சார் இங்கே இருக்கிறார். ‘சர்கார்’ படத்தில் ஒரு ஓட்டின் வலிமையை முருகதாஸ் சொல்லியிருந்தார், இன்று விஜய் சார் முதல்வராகியிருக்கிறார். திரையில் விஜய் சாரின் அந்த இடத்தை நிரப்ப தம்பி ஜெய் தயாராகிவிட்டார். பாபு விஜய் ஒரு ‘கமர்ஷியல் கில்லாடி’ என்பது டிரெய்லரிலேயே தெரிகிறது!”
நடிகர் கதிர் & பாடலாசிரியர் சினேகன்: கதிர், “ஜெய் கூட நடிச்சப்போ விஜய் சார் கூட நடிச்ச அதே எனர்ஜி தெரிஞ்சது” என்றார். சினேகன் பேசுகையில், “இசையமைப்பாளர் கிரிஷ் தமிழ் வரிகளை ரசித்து மெட்டுப் போடுகிறார். ‘உயிரே’ பாடல் நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்களின் ஃபேவரைட் ஆகப்போவது உறுதி!” எனப் புகழ்ந்து தள்ளினார்.
இயக்குநர் சசி: “பாபு விஜய் என் மாணவர். ‘நானே தயாரிக்கிறேன்’னு சொன்னப்போ பதட்டமானேன். ஆனால், ரிச்சர்ட்டின் ஒளிப்பதிவும், கிரிஷின் இசையும் படத்தைத் தரமான இடத்துக்குக் கொண்டு போயிருக்கிறது. குறிப்பாகப் பாரதியார் பாடலை ‘ராப்’ பாணியில் மாற்றியது செம மாஸ். பாபு விஜய் ஒரு ‘ப்ராமிஸிங்’ டைரக்டர்!”
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்: “என் 12-வது சிஷ்யன் இயக்குநராகிவிட்டார். ‘சர்கார்’ சமயத்தில் என் போஸ்டரை யாரோ கிழித்தபோது, என்கூடவே காரில் உட்கார்ந்து வருத்தப்பட்டவர் பாபு விஜய். ஏழு மணிக்கே காரில் வந்து வெயிட் பண்ணுவார். அவர் உழைப்பைப் பார்த்தால் எனக்கே சோம்லேறித்தனம் வந்துவிடும். இவ்வளவு தடைகளைத் தாண்டி படம் எடுத்திருக்கிறார், இவருக்கு வெற்றி டும் டும் டும் தான்!”
இயக்குநர் & தயாரிப்பாளர் பாபு விஜய்: “எல்லாவற்றுக்கும் என் மனைவி லக்ஷ்மி சர்மாவும், நண்பர் சத்யநாராயணனும் தான் காரணம். ‘சர்கார்’ சமயத்தில்தான் என் கரியர் தொடங்கியது, இன்று விஜய் சார் சி.எம் ஆக இருக்கும் நேரத்தில் என் முதல் படம் வருகிறது. ரிச்சர்ட் சார் சம்பளம் வாங்காமல் உழைத்தது என் வாழ்நாள் கடன். ஜெய் ஒரு அற்புதமான மனிதர். படத்தில் விஜய் சார் ரெஃபரன்ஸ்கள் இருக்கும், ஏனென்றால் நான் அவர் ரசிகன்!”
நாயகன் ஜெய்: “முருகதாஸ் சார் அட்வைஸ் படி சீக்கிரம் தூங்கி, மேக்கப் போடுவதைக் குறைத்து ஹெல்த்தியாக நடித்திருக்கிறேன். பாபு விஜய் ஒரு எனர்ஜி பாம். 150 சீன் எடுத்தாலும் டயர்ட் ஆக விடமாட்டார். படத்தின் முதல் பாதியில் விஜய் சார் ஸ்டைல் இருக்கும், இரண்டாம் பாதியில் கதை மிரட்டும். அண்ணன் (CM விஜய்) அரசியலில் ஜெயிச்ச மாதிரி, தம்பி நான் சினிமாவில ஜெயிப்பேன்!”
மே 15 – திரையரங்குகளில் ‘சட்டென்று மாறுது வானிலை’.. சரவெடி!

