நீதியா, அதிகாரமா? ப்ரைம் வீடியோவின் “சிஸ்டம்” ட்ரெய்லர் ரிலீஸ்!
சமூகத்தின் கசப்பான உண்மைகளைத் தோலுரித்துக் காட்டவும், “பணம் இருப்பவன் சொல்வதுதான் சட்டமா?” என்ற கனமான கேள்வியைக் கேட்கவும் தயாராகிவிட்டது ப்ரைம் வீடியோவின் புதிய ஒரிஜினல் படைப்பான “சிஸ்டம்”.
இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரியின் ஆகச்சிறந்த இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த விறுவிறுப்பான கோர்ட்-ரூம் த்ரில்லர், வரும் மே 22-ஆம் தேதி உலகமெங்கும் 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரத்யேகமாக வெளியாகிறது.
யார் யாரிடையே மோதல்?
டிரெய்லரில் சோனாக்ஷி சின்ஹா, நேகா என்ற இளம் மற்றும் துடிப்பான அரசு வழக்கறிஞராக மிரட்டுகிறார். ஒருபுறம் தன் தந்தை (அஷுதோஷ் கோவாரிகர்) என்ற ஆளுமைக்கு முன்னால் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்; மறுபுறம் நீதிக்கான போராட்டம்! அவருக்குத் துணையாக, மர்மம் நிறைந்த நீதிமன்ற ஸ்டெனோகிராஃபராக ஜோதிகா (சரிகா என்ற கதாபாத்திரத்தில்) களமிறங்கியுள்ளார்.
ஜோதிகாவின் வருகைக்குப் பின் கதை எடுக்கும் திருப்பங்களும், நீதிமன்றத்தில் நடக்கும் அனல் பறக்கும் விவாதங்களும் ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
படத்தின் சிறப்பம்சங்கள்:
-
மிரட்டலான கூட்டணி: சோனாக்ஷி சின்ஹா – ஜோதிகா என இரு வலிமையான பெண் ஆளுமைகள் முதல்முறையாக இணைந்து திரையை ஆக்கிரமிக்கின்றனர்.
-
பவர்ஃபுல் வசனங்கள்: “பணக்காரர்களின் சத்தத்தில் ஏழைகளின் குரல் காணாமல் போய்விடுகிறது” போன்ற வசனங்கள் சமூகத்தின் மீதான சாட்டையடியாக விழுகின்றன.
-
திரைக்கதை பலம்: Baweja Studios தயாரிப்பில் ஹர்மன் பவேஜா உள்ளிட்ட குழுவினர் எழுதியுள்ள இந்தத் திரைக்கதை, வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி, நம்மைச் சிந்திக்கவும் வைக்கும்.
நடிகைகள் உற்சாகம்!
“இது வெறும் நீதிமன்ற நாடகம் மட்டுமல்ல, சமூகத்தின் கண்ணாடியாக இருக்கும் ஒரு படம்” என்கிறார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
“நவீன இந்தியாவின் சமத்துவமின்மையை உரக்கப் பேசும் இந்தப் படத்தில் நடித்தது மிகச் சிறந்த அனுபவம்” என மகிழ்ச்சி தெரிவிக்கிறார் ஜோதிகா.
மே 22 முதல் உங்கள் “சிஸ்டம்”-ல் சிஸ்டம் படத்தைக் காணத் தயாராகுங்கள்!

