பெருமை!: சைதையாரை பேட்டி எடுத்த சேத்தன் பகத் யார் தெரியுமா?
பிரபல, “போர்ப்ஸ் இந்தியா” இதழ், இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இணையற்ற 40 கல்வி சேவகர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர். சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியிடம் எழுத்தாளர் சேத்தன் பகத் முதல் பேட்டி எடுத்தார்.
போர்ப்ஸ் இந்தியா பட்டியலில் இடம் பிடித்தது ஒரு பெருமை என்றால், சேத்தன் பகத் பேட்டி கண்டது இன்னொரு பெருமை!
யார் இந்த சேத்தன் பகத்?
சேத்தன் பகத் பிறந்த ஊர் புதுடில்லி. இவர் பள்ளிப் படிப்பை இராணுவப் பொதுப் பள்ளியில் முடித்தார். அவர், டில்லி இருக்கும் ஐ.ஐ.டி.யில் பொறியியல்,படிப்பையும், அகமதாபாத் ஐ.எம்.எல். கல்வி நிலையத்தில் முதுகலை மேலாண்மை படிப்பையும் முடித்தார். அடுத்து டியூட்சே வங்கியில் முதலீட்டு வங்கியாளராகப் பதினோரு ஆண்டுகள் ஹாங்காங்கில் பணியாற்றினார். பிறகு அவர் தனது மனைவியுடன் 2008 மும்பையில் குடியேறினார்.
பின்னர் தனது பணியை விட்டு விலகி முழு நேர எழுத்துப் பணியில் இறங்கினார்.
அவரது எழுத்தாற்றல் உலகப்புகழ் பெற்றது. சேத்தன் பகத் சிறப்பாக தெளிவாக தனது கருத்துகளை வெளிப்படுத்தக் கூடியவர்.
பிரபல இந்தி செய்தித்தாளான தைனிக் பாஸ்கர் மற்றும் ஆங்கில நாளிதழ் தி இந்துஸ்தான் டைம்ஸ் போன்றவற்றில் தலையங்கத்துக்கு எதிர்ப்புறத்தில் ஒரு பத்திகள் பகத் அவருக்கு ஒதுக்கியிருப்பது குறிப்பிடதக்கது.
அவருடைய கட்டுரைகள் சில இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
அவரது எளிமையான ஆங்கில எழுத்து நடை பெரும்பாலான மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கின்றன. அதே சமையம் ஆழமான கருத்துக்களை கொண்டதாகவும் உள்ளது..
இவர் 2004 ஆம் ஆண்டில் சொசைடி இளம் சாதனையாளர் விருது மற்றும் 2005 ஆம் ஆண்டில் வெளியீட்டாளர்களின் அங்கீகாரத்திற்கான விருது ஆகியவற்றை சேத்தன் பகத்துக்கு வழங்கபப்ட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளர் – எழுத்தாளர், மனிதநேயர் சைதாயாரை பேட்டி கண்டது சேத்தன் பகத் பெருமைக்கு பெருமை செர்த்துள்ளார் என்றே கூறவேண்டும்.