ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் இலவச உயர்கல்வி ஏன்?மனிதநேயர் சைதையாரின் விரிவான விளக்கம்.

மனிதநேயர் மாணவர்களின் தந்தை சென்னை முன்னால் மேயர் சைதை துரைசாமி அவர்கள். எம்.ஜி.ஆர். கூறியதை ஏற்று சேவையை பிரதானப்படுத்தி,பொதுவழ்க்கையை  கடைபிடித்துவருவதாக பிரபல ’போர்ப்ஸ் இந்தியா’ இணையதளத்திற்கு  அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

 இந்திய அளவில் கல்வி சேவை செய்யும் 40பேரை தேர்வு செய்தது பிரபல, ‘போர்ப்ஸ் இந்தியா’ இணையதளம்.  இந்த தேர்வில் முதன்மையானவராக சென்னை மாநகர முன்னாள் மேயரும், மனிதநேயம் அறக்கட்டளை நிறுவனருமான, சைதை துரைசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

அதில் அவர் கூறியதாவது;

ஒரு கிராமத்தில் பிறந்து  நகர்புறத்தில்  துவங்கி, அரசியல், வணிகம் இரண்டையும் இணைந்து   நடத்தினேன். எனது துவக்க காலம் முதல், இந்த சேவையை பிரதானப்படுத்துவதற்கு,  இரண்டு பேர் காரணம். முதலில் என் அம்மா, இரண்டாவது அம்மாவை போல் என் தலைவர் எம்.ஜி.ஆர்., ஆகியோரே இதற்கு காரணம்.  ‘சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும்’ என, எம்.ஜி.ஆர்., என்னிடம், 1973ல் கூறினார். அதை ஏற்று, சேவையை பிரதானப்படுத்திய ஒரு பொது வாழ்க்கையை, இதுவரை, நான் கடைபிடித்து வருகிறேன்.

நான் சம்பாதிப்பது  மக்களுக்காக என்ற, எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறேன். ‘ஓடி ஓடி உழைக்க வேண்டும்; ஊருக்கெல்லாம் கொடுக்க வேண்டும்’ என்ற, எம்.ஜி.ஆர்., திரைப்படப்பாடல் அடிப்படையில், மனித நேயம் அறக்கட்டளை துவக்கப்பட்டது.  ஏன் எதற்காக இந்த இலவச கல்வி  என்பதை நான் உங்களிடம் தெளிவுப்படுத்த வேண்டும். முதன் முதலாக, பொறியியல் கல்லுாரி துவங்கிய காலத்தில், ஆர்.எம்.வீரப்பன் என்னை, பொறியியல் கல்லுாரி ஆரம்பிக்கும்படி கூறினார்; நான் மறுத்து விட்டேன். ‘கல்வியை காசாக்க கூடாது. என்னிடம் பணம்  இருந்தால், கல்வியை இலவசமாக கொடுப்பேன்’ என்று, 1983ல்  உறுதியாக முடிவெடுத்துக் கூறினேன்.

அதற்கு அப்புறமாக பொருளதாரத்தில் உயர்ந்தா பிறகு ஒரு முடிவெடுத்தேன். ஜனனாயகத்தின் நான்கு தூண்கள் எப்படியிருக்க வேண்டும்? நல்ல அரசியல்வாதி, அதிகாரிகளும் சேர்ந்து பணியாற்றினால் இந்த ஜனனாயகத்தைக் காப்பாற்ற முடியும். என்ற அடிப்படையில்  நல்ல அரசியல்வாதியாக என்னை வடிவமைத்துக் கொண்டு நான் செயல்பட்டுக் கொண்டுயிருக்கிறேன். ஜனனாயகத்தை காப்பற வேண்டிய கடமையில் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.ஆர்.எஸ் போன்ற உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள். நேர்மையாக, சேவைமனப் பான்மையுடன் லஞ்சம், லாபதிற்கு அப்பாற்பட்டவராக இருந்தால் இந்த சமூதாய கட்டமைப்பு சரியாக இருக்கும் என்ற தீராத ஆசையின் அடிபப்டையில் இந்த மனிதநேய அறக்கட்டளை 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நூறு பேர்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த  ஐ.ஏ.எஸ். இலவச கல்வி அறக்கட்டளை இன்று 18 ஆயிரம் பேர்கள் வரை இலவசமாக  கல்வியை தொடர்ந்து கொடுத்துவருகிறது. இது 3500க்கும் மேலான வெற்றியாளார்களையும், உயர்பதவியை கொடுத்துள்ளது. மிகவும் பிந்தங்கி தகுதி, திறமை இருந்தும், பொருளாதாரம் ஒன்றுதான் தடை என்றிருப்போருக்கு, அந்த தடையை தகர்த்து, அவர்கள் தகுதிக்கு அங்கீகாரத்தை கொடுத்துள்ளோம்.

 அவர்கள் நேர்மையானவர்களாக, துாய்மையானவர்களாகவும், தேசப்பற்று உள்ளவர்களாகவும், மக்களுக்கு சேவை செய்வர். இது, ஒரு மகிழ்ச்சிகரமான பணி. சேவை என்பது மன நிறைவு. இந்த நாட்டிற்காக, நல்ல சிந்தனை, நல்ல பண்புகளை உடைய, இளைஞனை தயார் செய்து, நாட்டின் நான்கு துாண்களில், ஒரு துாணாக நிற்க வைத்து…அந்த இளைஞர்கள்  மிகப்பெரிய பதவியில் அமர்ந்து விட்டு, என்னை வந்து பார்க்கிறபோது, எனக்கு மன நிறைவு ஏற்படுகிறது.

என்று தனது மகத்தான சேவையை மனமகிழ்ச்சியுடன்  ’’போர்ப்ஸ் இந்தியா’’ இணையதளத்தில் பகிந்து கொண்டார்  சைதை துரைசாமி.