காவல்துறையை பெருமைப்படுத்தியதற்காக வருத்தப்படுகிறேன்!: இயக்குனர் ஹரி

சாத்தான்குளத்தில் இருவரை காவல்துறையினர் அடித்கொன்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை பல்வேறு துறையினர் கண்டித்து வருகின்றனர். திரைத்துறையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இயக்குனர் ஹரியும் தனது வருத்ததை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது . அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே….
காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுதியுள்ளது. …
காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்…!” என்று தெரிவித்துள்ளார்.
 
இவர் விக்ரம் நடித்த சாமி, சூர்யா நடித்த சிங்கம் 1,2 மற்றும் 3 ஆகிய காவல்துறையை உயர்த்தும் படங்களை இயக்கியவர்.
 
 
 

Related Posts