சான்றிதழ்: சினிமா விமர்சனம்

சான்றிதழ்: சினிமா விமர்சனம்

ஒரு கிராமத்தில், மக்கள் அனைவரும் சாதி,மத பேதம் இன்றி ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அதோடு, புகை, மதுவுக்கு தடை விதித்து இருக்கிறார்கள். இதனால் அந்த கிராமத்துக்கு அரசு விருது கிடைக்கிறது.

இப்படி ஊர் இருப்பதற்கு நாயகன் ஹரி குமார் கொடுத்த விலை என்ன என்பதுதான் கதை.

கதைச் சுருக்கம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதைச் சொன்னவிதத்தில் சொதப்பி இருக்கிறார்கள்.

ராதாரவி, அருள்தாஸ், கவுசல்யா, ரவிமரியா ஆகியோரின் நடிப்பு மட்டுமே படத்துக்கு ப்ளஸ்.

மற்ற எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

பெண்கள் அனைவருமே, கணவனுக்கு துரோகம் செய்பவர்கள் என பல காட்சிகளை அமைத்து இருக்கிறார்கள். அப்படி என்ன கோபமோ?

சரி.. அதை சொன்னவிதமாவது சரியாக இருந்ததா?

கதைவிவாதத்தை நடத்தும்போது, ‘இப்படி எல்லாம் காட்சிகளை வைக்கிறோமே’ என்று இயக்குநர் குழுவினர் சிந்திக்கவோ.. குறைந்தபட்சம் சிரிக்கவோ மாட்டார்களா?

 

 

 

Related Posts