ஹிட்லர்: திரைப்பட விமர்சனம்

ஹிட்லர்: திரைப்பட விமர்சனம்

மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஏ.தனா, வானம் கொட்டட்டும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவர் தற்போது இயக்கி இருக்கும் படம்தான், ஹிட்லர்.

விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, கெளதம் வாசுதேவ் மேனன் , சரண் ராஜ் , விவேக் பிரசன்னா , ரெடி கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்து கடைசியாக வெளியான ரோமியோ மற்றும் மழை பிடிக்காத மனிதன் ஆகிய இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றிபெறாத நிலையில் ஹிட்லர் திரைப்படம் வெளியாகி உள்ளது.
அடிப்படை வசதி ஏதும் இல்லாத…. தேனி மாவட்ட மலைகிராமம்..வேலைக்குச் செல்ல, பள்ளி, மருத்துவமனக்குச் செல்ல என எந்த விசயமாக இருந்தாலும் பக்கத்தில் ஓடும் ஆற்றைக் கடக்க வேண்டும். பாலம் கேட்டு மக்கள் மனு கொடுத்தாலும் கவனிப்பார் இல்லை.

திடீரென ஆற்று வெள்ளம் அதிகமாகி அடிக்கடி பலரும் உயிரிழக்கிறார்கள்.

இதற்கிடையே, தேர்தல் வர ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வர திட்டமிடுகிறது, தமிழ் திராவிட சமூதாயக் கட்சி. இந்த கட்சியின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் சரண் ராஜ் ஊழல் வழக்கில் சிக்கி மக்களின் ஆதரவை இழக்கிறார்.

ஆனாலும் எப்படியாவது என்ன செய்தாவது, தேர்தலில் வெற்றிபெற திட்டம் தீட்டுகிறார்.

அதற்காக மக்களுக்கு பணம் கொடுத்து வாக்கு பெற நினைக்கிறார். ஆனால் தொகுதிக்கு ( மக்களுக்கு) பிரித்துக் கொடுக்க எடுத்துச் செல்லப்படும் கோடிக்கணக்கான பணத்தை யாரோ திருடிச் சென்றுவிடுகின்றனர்.

அதுமட்டுமின்றி, அமைச்சரின் ஆட்களை கொலையும் செய்துவிடுகிறார்கள்.

இந்த கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கிறார், காவல் உயர் அதிகாரி டிஐஜி கெளதம் வாசுதேவ் மேனன்.

இன்னொரு பக்கம் சென்னைக்கு வேலை தேடி வருகிறார் நாயகன் விஜய் ஆண்டனி. வந்த இடத்தில், ஒரு இளம் பெண்ணைப் பார்த்து அவர் மேல் காதலில் விழுகிறார்

இந்த இரண்டு கதைகளும் மாறி மாறி காட்சிகளாக விரிய… ஒரு கட்டத்தில் இந்த கொலை,கொள்ளைகளை செய்வது விஜய் ஆண்டனி தான் என கண்டுபிடிக்கிறார் கெளதம் மேனன்.

அவர் ஏன் இந்த கொலை, கொள்ளைகளை செய்கிறார். திருடிய பணத்தை என்ன செய்கிறார்.. இறுதியில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டாரா… என்பதுதான் மீதிக்கதை.ஒவ்வொரு கொலை நடக்கும்போதும்,அதை யார் செய்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. இன்னொரு புறம் காதல் காட்சி விரிகிறது. இது நல்ல யுக்தி. ரசிக்க வைக்கிறது.

ஆனால் விஜய் ஆண்டனிதான், நடிப்பேனா நான என வழக்கம்போல அழிச்சாட்டியம் பிடிக்கிறார். நமக்கும் பழகிவி்ட்டது. ஆகவே அதை மைனஸாக சொல்ல முடியவில்லை.

ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. விவேக் பிரசன்னாவின் நடிப்பும் ஓகேதான்.

அதிரடி ஆக்சன் படத்தில் நாயகிக்கு எந்த அளவுக்கு காட்சிகள் இருக்குமோ, அந்த அளவுக்கு வந்து போகிறார் ரியா சுமன். ஆனாலும் நாயகி கதாபாத்திரத்தை வித்தியாசப்டுத்திக் காட்டி இருக்கிறார், இயக்குநர்.விவேக் பிரச்சனாவின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை அபாரம். ஒரு அதிரடி படத்துக்குத் தேவையான பி.ஜி.எம்.ஐ. அளித்து இருக்கிறார்.

ஒளிப்பதிவு அசத்தல். அதுவும்  பிரவாகம் எடுத்து ஓடும் ஆறு, அங்கு பாலம் கட்டும் பணி நடக்கும் காட்சகளில் பிரமிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர்.

கொலை, கொள்ளை என அதிரடி த்ரில்லராக இருந்தாலும், மக்கள் பிரச்சினையைச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.

..

Related Posts