விமர்சனம்: சிறுவன் சாமுவேல்

விமர்சனம்: சிறுவன் சாமுவேல்

அறிமுக இயக்குநர் சாது ஃபெர்லிங்டன் உருவாக்கத்தில் புதுமுகங்கள்  அஜிதன் தவசிமுத்து,  K.G விஷ்ணு, S.செல்லப்பன், S.B.அபர்பணா, M.A.மெர்சின், J.ஜெனிஸ், உள்ளிட்டோர் நடித்துள்ள படம்.

ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்று பார்த்து பார்த்து சலித்த நிலையில், கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக வந்துள்ளது, சிறுவன் சாமுவேல் திரைப்படம்.

சிறுவர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள்.. அதை பெரியர்கள் பார்க்கும் பார்வை என சுவாரஸ்யமாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர் சாது.

சிறுவர்கள் இருவர் நண்பர்கள், கிரிக்கெட் பேட் வாங்கிவிட வேண்டு் என்று ஆசைப்பட.. அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள்தான் கதை.

சிறிதும் மிகைப்படத்தல் இல்லாமல், அதே நேரம் சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது கதை. குமரி மாவட்ட தமிழை மட்டுமல்ல.. அதன் இயற்கை அழகையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.

அதோடு வெகுபல குமரி மக்களின் வறிய நிலையையும் படம்பிடிக்க தவறவில்லை. “வேற வழியில்லாம தவணையில டிவி வாங்கியிருக்கேன்”  என்கிற வசனம் ஒரு உதாரணம்.கதை 1990களில் நடக்கிறது. அதற்கேற்றபடி தூர்சர்சன் நிகழ்ச்சி ஓடும் டிவி, வண்ண அட்டைகளை சேர்க்கும் சிறுவர்கள் ( முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று, இந்த வண்ண அட்டைகள்) என ரசிக்கவைக்கிறது படம்.

வி. சிவானந் காந்தியின் ஒளிப்பதிவு சிறப்பு. குமரியின் பசுமையை கண் முன் நிறுத்தி இருக்கிறார். அதே போல S.சாம் எட்வின் மனோகர் & J.ஸ்டாண்ட்லி ஜான் ஆகியோரின் இசை ரசிக்கவைக்கிறது.

எளிய மக்களின் கதையை இத்தனை ரசிப்புடன் படமாக்கியுள்ள இயக்குநர் மற்றும் குழுவினருக்கு பாராட்டுகள். அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

 

 

 

Related Posts