விமர்சனம்: ’பொன் மகள் வந்தாள்’ சவுக்கடி..!
வித்தியாசமான கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடித்திருக்கிறார் ஜொதிகா. நீதிமன்றத்திற்கு எத்தனை பொய் சாட்சிகளையும் கொண்டுவரலாம் ஆனால் கடைசியில் உண்மைதான் வெல்லும் என்று உறக்கச் சொல்லியிருக்கிறாள் ‘பொன்மகள் வந்தாள்’.
பெட்டிசன் பெத்துராஜின் மகளான வெண்பா போலீஸாரால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சைக்கோ குற்றவாளியாக சித்தரிகக்ப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட சத்யஜோதிக்கு ஆதரவாக நீதிக்காகப் போராடுகிறாள். அங்கிருந்து படம் தொடங்குகிறது.
சைக்கோ குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட சத்யஜோதியை நிரபராதி என நிரூபிக்க போராடுகிறாள் வெண்பா. பெண் குழந்தைகளைக் கடத்தி கொடுரமாக கொலை செய்யும் சைக்கோ குற்றவாளி என்று போலீஸாரல் நம்ப வைக்கப்பட்டு இறந்து போன சத்யஜோதிக்கு நீதி கிடைத்து மக்கள் முன் அவர் குற்றவாளி இல்லை என நிரூபிக்கப் போராடுகிறாள் வெண்பா. சத்யஜோதிக்காக போராடும் நாயகிக்கு சத்யஜோதி யார்?
பணபலமும், அதிகாரமும் நீதியை எப்படி எல்லாம் தனக்கு சாதகமாக மாற்றியிருக்கும் இந்த காலத்தில் வெண்பாவின் துணிச்சாலால் நீதி எப்படி வென்றது? அதற்காக அவள் எத்தனை சவால்களை கடந்து நீதியை வென்றாள் என்பதை இரண்டு மணி நேரத்தில் மிக அற்புதமாக, நமக்குப் புரியும் படி காட்சிப்படித்திருக்கிறார் இயக்குநர் ப்ரெட்ரிக்.
வித்தியாசமான கதை, த்ரில்லார், என எல்லோரும் வியக்கும் அளவிற்கு அற்புதமாக வெளிப்படுத்திருக்கிறார் வெண்பாவாக நடித்திருகும் ஜோதிகா. நீண்ட வசிகரமான வசனங்கள், பார்த்திபனுக்கே பன்ச்களில் ஜோதிகா தெறிக்க விட்டிருக்கிறர். படத்தில் பார்த்திபன்,ஜோதிகா வாதங்கள் செம்ம… பாக்கியராஜ் மற்றும் நீதிபதியாக வரும் பிரதாப் போத்தன் மிக அழகாக எதார்த்த நடிப்பு அருமை.
பாண்டியராஜனுக்கு பெரிய கதாப் பாத்திரம் இல்லை என்றாலும் பிரதாப் போத்தனுக்கும் அவருக்குமான காட்சிகளை அற்புதமாக நிறைப்பிவிடுகிறார். மற்றும் தியகாராஜன் வில்லனத்தனம் ரசிக்கவைக்கிறது.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை சோகமான கதைப்பின்னணியை நினைவூட்டுகிறது. ஊட்டியின் அழகை சலிக்காமல் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
நல்லவர்கள் என முகமூடிப் போட்டுக் கொண்டு பெண்குழந்தைகளிடம் அத்து மீறும் அயோக்கியர்கள் நம் நாட்டில் எத்தனை போர். அத்திமீறுபவர்களை குழந்தைகள் சொல்லத் துடங்கினால் நல்லவர்களாக வேஷம் போடும் பெரும்பாலான ஆண்கள் முகத்திரை கிழிக்கப்படும்போது எதனை அசிங்கம். அவ்றான நல்லவர்களுக்கு சவுக்கடி கொடித்திருக்கிறாள் ’பொன்மகள் வந்தாள்’.
பல வருட சினிமா வாழ்வில் ஒரு படம் நேரடிக வீட்டுக்குள் ரிலீஸாகியிருப்பது இதுவே முதல் முறை. அந்தப் பெருமையை எல்லாம் அமேசான் மூலமாகப் ’பொன்மகள் வந்தாள்’ அடைந்திருக்கிறது.
எஸ்.யாழினி