விமர்சனம்: லால் சலாம்

தற்போது நாட்டுக்கு மிகவும் ஆபத்தாக இருக்கும் மதவாத அரசியல் குறித்து சிறப்பாக பேசியிருக்கும் திரைப்படமாக லால் சலம் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
மூரார்பாத் கிராமத்தில் இந்து – இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் சிலர், இம்மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவருமே ஆளுக்கொரு கிரிக்கெட் அணியில் இருக்கிறார்கள். ஒன்று ‘இந்து’ அணி.. இன்னொன்று ‘இஸ்லாமிய’ அணி. முன்னதை இந்தியாவாகவும், பின்னதை பாகிஸ்தானாகவும் திட்டமிட்டு உருவகப்டுத்துகிறார்கள் சிலர்.
இதனால் ஏற்படும் கலவரம், அதன் பின் ஏற்படும் தீர்வு.. ஆகியவைதான் கதை.
நாயகர்கல் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவருமே சிறப்பாக நடித்து உள்ளனர். குறிப்பாக கிரிக்கெட் ஆடும் காட்சிகளில் ஷாட்கள், ஃபுட் ஒர்க்குகள் என நேர்த்தியுடன் – நிஜமாகவே – விளையாடி இருக்கிறார்களோ என தோன்ற வைக்கிறது.
தன்னால்தான் ஊருக்கு பிரச்சினை என்று குமையும் காட்சிகளில் சிறப்பாக உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார் விஷ்ணு விஷால். அதே போல விக்ராந்தும் தனது பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார்.இஸ்லாமியர் – இந்துக்கள் ஒற்றுமை, அதன் பின் மோதல், விஷ்ணு விஷாலின் கதை, அவரின் காதல், இரண்டு கிரிக்கெட் டீம்கள், ரஜினிகாந்த், அவர் மகன் விக்ராந்த், அவரின் கிரிக்கெட் கனவு, திருவிழா தேர், அதன் பிரச்னை… என எக்கச்சகமான கிளைக்கதைகள் திரையில் வேகமெடுத்து ஓடி, சிக்கித் திணறுகிறது முதற்பாதி திரைக்கதை.
மத வெறி அரசியலுக்கு எதிராக மனித நேயம் பேசும் படம் என்கிற அளவில் உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் உருவாக்கிய முறை எப்படி இருக்கிறது என்பதுதான் கேள்வி.
இரு கிரிக்கெட் அணிகள். ஒன்றில் இந்துக்கள் மட்டுமே இருக்கின்றனர்.. இன்னொன்றில் இஸ்லாமியர்கள் மட்டுமே ஆடுகின்றனர். அரசியல்வாதிகள் சிலர் தங்கள் சுயநலத்துக்காக இப்படி இருவேறு அணிகளாக பிரித்து மோத விடுகிறார்கள். தொடர்ந்து பிரிவினையை ஏற்படுத்தும்படி கலவரத்தை மூட்டுகின்றனர்.
இறுதியில் என்ன ஆனது என்பதுதான் கதை.
நாயகன் விஷ்ணு விஷால் சிறப்பாக நடித்து உள்ளார். தன் மீது ஊரே குற்றம் சுமத்துவதைக் கண்டு பொருமுவது, உயிராய் மதித்த கிரிக்கெட்டை விளையாட மறுப்பது என்று பாத்திரம் அறிந்து தனது நடிப்பை வழங்கி உள்ளார். மற்றொரு நாயகனான விக்ராந்துக்கு அவ்வளவாக நடிக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும் வருகிற காட்சிகளில் நிறைவாக நடித்து உள்ளார்.
விவேக் ப்ரசன்னா, லிவிங்ஸ்டன், நிரோஷா, தங்கதுரை, தன்யா பாலகிருஷ்ணன் ,செந்தில், தம்பி ராமையா, ஜீவிதா ஆகியோர் என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். அவருக்கு உரிய முக்கியத்துவைத்தை அளித்ததுள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு சிறப்பு. குறிப்பாக தேர் எரியும் காட்சியிலும் கவலவர காட்சியிலும் மிரள வைக்கிறார்.
ரஜினி… சொல்லவும் வேண்டுமா? மகனின் போட்டோவுடன் (!) கிரிக்கெட் விளையாடுவது, தன்னை மகன் புகழும்போது வெட்கப்படுவது, எதிரிகளுக்கு கம்பீரமாக அறிவுரை சொல்வது… என வழக்கம்போல அதகளப்படுத்துகிறார் ரஜினி.
பி.பிரவின் பாஸ்கரின் படத்தொகுப்பு கச்சிதம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. அதே போல பின்னணி இசையும் படத்துக்கு பலமாக விளங்குகிறது.மதப்பிரச்சினை, மோதல், கிரிக்கெட், தேர், கந்தூரி, பிரச்சினை, மும்பை ரஜினியின் வாழ்க்கை என பல்வேறு திசைகளில் கதை பயணித்தாலும், அனைத்தையும் அழகாக ஒருங்கிணைத்து குழப்பம் இல்லாமல் சுவாரஸ்யமாக தந்துள்ள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி காந்த்.
தற்போதைய மத அரசியல் காலகட்டத்தில் அவசியமான திரைப்படம். அதற்காகவே இயக்குரை வாழ்த்தலாம்.